கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரைச் சேர்ந்தவர் காளியம்மாள். இவர் கடந்த 28ம் தேதி நரசிபுரம் சாலையில் உள்ள தீயணைப்பு நிலையம் எதிரே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த இளம்ஜோடி, மூதாட்டியிடம் முகவரி கேட்பது போல் நடித்து, கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் அணிந்திருந்த 5 சவரன் தங்க நகையை பறித்து விட்டு தப்பியோடினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் காளியம்மாளின் தங்கச் செயினை பறிக்க பயன்படுத்திய இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை கண்டுபிடித்தனர். வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு அதன் உரிமையாளரான சோமையம்பாளையத்தை சார்ந்த 20 வயதே ஆன பிரசாத் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. சுங்கம் பகுதியைச் சார்ந்த 20 வயது இளம் பெண் தேஜஸ்வினி என்பவரை பிரசாத் காதலித்து வந்திருக்கிறார். இருவரும் பேரூர் பச்சாபாளையம் பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் பி.டெக்  மூன்றாம் ஆண்டு படித்து வந்தனர். காதலர்களான இருவரும் தொழிலதிபர்களின் வாரிசுகள் என்பதால் ஆடம்பர வாழ்க்கையை அளவுக்கதிகமாக ரசிப்பவர்களாக இருந்துள்ளனர்.


அதனால் அதிக பணத்தை வாரி இரைத்து சொகுசு வாழ்க்கையை அனுபவித்து வந்திருக்கிறார்.இருவரும் கல்லூரியில் படித்துவந்ததால் வருமானம் இல்லை. கையில் கிடைக்கும் காசும் காலியாக, அப்போதுதான் பிரசாத் தனது சொந்த வீட்டிலேயே கைவரிசை காட்டியிருக்கிறார். காதலியுடன் ஊர் சுற்ற சில மாதங்களுக்கு முன்னர் பிரசாத் தனது வீட்டில் இருந்த 30 சவரன் தங்க நகையை திருடியுள்ளார். நகைகள் திருடு போனது தொடர்பாக காவல் துறை விசாரித்த போது தங்களது மகன் பிரசாத்தான் திருடன் எனத் தெரியவந்ததால் அவரது பெற்றோரே புகாரை திரும்பப் பெற்றிருக்கிறார்கள். இதற்கிடையே, ஆட்டம் போட பணம் இல்லாததால் ஆன்லைன் பந்தயத்தில் இறங்கிய பிரசாத் அதிலும் எக்கசக்க பணத்தை விட்டிருக்கிறார். கையில் காசு இல்லை சொகுசு வாழ்க்கைக்கு வேறு வழி என்று யோசித்தவர், காதலியுடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட முடிவெடுத்தார்.



மேலும் படிக்க | ராணிப்பேட்டை: மகன் தற்கொலை செய்துகொண்ட விரக்தியில் பெற்றோரும் தூக்கிட்டு தற்கொலை!


ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த காளியம்மாளிடம் தங்களது கைவரிசையைக் காட்டி தங்கசெயினை பறித்துச் சென்றிருக்கிறார். இதனையடுத்து காதல் ஜோடி பிரசாத், தேஜஸ்வினி இருவரையும் கைது செய்த போலீசார்,அவர்களிடமிருந்த 5 சவரன் தங்கச் செயினை கைப்பற்றினர். இதனையடுத்து இருவர் மீது வழக்குப்பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


மேலும் படிக்க | 'குவாட்டர் விலை ஏறிப்போச்சி' - கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை வைத்த மதுப்பிரியர்.!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


மேலும் படிக்க | இலங்கையில் இந்திய வம்சாவளி மக்களுடன் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துரையாடல்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR