குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தோல்வி: இழப்பீடு 60000 ரூபாயாக உயர்ந்தது
Family Planning Compensation: குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தோல்வி அடைந்தால் வழங்கப்படும் இழப்பீடு தொகை, 30 ஆயிரம் ரூபாயில் இருந்து 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை: அரசு மருத்துவமனைகளில் செய்து கொள்ளும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தோல்வி அடைந்தால் வழங்கப்படும் இழப்பீடு தொகை, 30 ஆயிரம் ரூபாயில் இருந்து 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை தோல்வி அடைந்ததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தனக்கு இழப்பீடாக 50 லட்சம் ரூபாய் வழங்கவேண்டும் என்று மனுதாரர் கனிமொழி கோரிக்கை விடுத்திருந்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தை பெரிய கரும்பூர் என்ற பகுதியைச் சேர்ந்த கனிமொழி என்பவர் 2018ம் ஆண்டு, பாடி அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டார்.
இருப்பினும், கருவுற்ற போது,கர்ப்பத்தை கலைத்தால் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் தெரிவித்ததால் மூன்றாவது குழந்தை பெற்றுக் கொண்டதாகவும், குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை தோல்வி அடைந்ததால் தனக்கு இழப்பீடாக 50 லட்சம் ரூபாய் தர உத்தரவிட வேண்டும் என்று கோரி கனிமொழி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மேலும் படிக்க | தாலியை கழற்றுவது கணவருக்கு அளிக்கும் மனரீதியான துன்புறுத்தல்: சென்னை நீதிமன்றம்
மனுதாரர் கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கும், மருர்துவ துறை அதிகாரிக்கும் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி எம். தண்டபாணி முன் விசாரணை வந்தபோது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இதேபோல நடந்த சம்பவத்திற்கு ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் சுமார் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டதை சுட்டிக்காட்டினார். மேலும் மனுதாரர் கூலித் தொழிலாளி என்றும் குடும்பம் வறுமையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், குடும்ப கட்டுப்பாடு காப்பீட்டு திட்டத்தின் கீழ் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை செய்து கொண்ட பெண் ஒரு வாரத்தில் இறந்துவிட்டால், அவரின் குடும்பத்திகு வழங்கப்பட்டு வந்த இழப்பீடு தொகை 2 லட்சம் ரூபாயில் இருந்து, 4 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
மேலும் படிக்க | டிஜிபி சைலேந்திரபாபு மீது போடப்பட்ட வழக்கு ரூ.2000 அபராதத்தோடு தள்ளுபடி!
மேலும், ஒரு மாத காலத்திற்குள் இறந்தால் 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு என்பதை ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி இருப்பதாகவும், குடும்பக் கட்டுப்பாடு தோல்வி அடைந்தால் வழங்கப்படும் இழப்பீடு தொகையான 30 ஆயிரம் ரூபாயை 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்த அவர், அது தொடர்பன அரசாணையை தாக்கல் செய்தார்.
குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை 60 நாட்கள் வரை இருந்தால் சிகிச்சை செலவு 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார். கூடுதல் தலைமை வழக்கறிஞர் வழங்கிய தகவல்களை பதிவு செய்து கொண்ட நீதிபதி எம். தண்டபாணி, வழக்கை முடித்து வைத்து, மனுதாரருக்கு வேறு ஏதாவது நிவாரணம் தேவைப்பட்டால் தனியாக வழக்கு தொடரலாம் என்று உத்தரவிட்டார்.
மேலும் படிக்க | ITI படித்தவருக்கு அணுசக்தி கழகத்தில் வேலை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ