ITI படித்தவருக்கு அணுசக்தி கழகத்தில் வேலை

ஐடிஐ படித்தவர்களுக்கு 8,855 ரூபாய் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 11, 2022, 05:17 PM IST
  • ஐடிஐ படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை
  • அணுசக்தி கழகத்தில் விண்ணபியுங்கள்
  • நான்கு நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
ITI படித்தவருக்கு அணுசக்தி கழகத்தில் வேலை  title=

அரசு வேலை வாய்ப்பு தேடுபவர்களுக்கு மத்திய அரசுக்கு சொந்தமான அணுசக்தி கழகத்தில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஐடிஐ மட்டும் படித்திருந்தால் போதும். 8,855 ரூபாய் ஊதியத்துடன் உங்களுக்கு அரசு வேலை தயாராக இருக்கிறது. இந்த அறிவிப்பு மூலம் பிட்டர் அப்பரண்டீஸ் (FITTER APPRENTICE) காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. 

இந்த காலிப் பணியிடங்களுக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்களையும் இங்கே தெரிந்து கொள்ளலாம். 

காலிப் பணியிடங்கள்:

FITTER APPRENTICE– 47 காலியிடங்கள்

மேலும் படிக்க | IDBI வங்கியில் வேலை வாய்ப்பு - முழு விவரம்

வயது:

FITTER APPRENTICE– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போரின் குறைந்தபட்ச வயது 14 ஆக இருக்க வேண்டும். அதிகபட்சம் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்

ரூ.8,855/ சம்பளம் வழங்கப்படும். 

கல்வித்தகுதி:

FITTER APPRENTICE பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் ITI படித்து இருக்க வேண்டும்.

அனுபவம்:

FITTER APPRENTICE பணிக்கு அனுபவம் இருக்க வேண்டிய அவசியமில்லை.

தேர்வு:

ITI மதிப்பெண்கள் அடிப்படையில் பணி 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

15.07.2022 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். அதிகாரப்பூர்வ தளத்தில் இருந்து உரிய விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, அதனை சரியாக பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் படிக்க | Job Alert: இந்தியன் வங்கியில் பணி புரிய விருப்பமா? உடனே விண்ணப்பிக்கவும் 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: 

DEPUTY MANAGER,

NUCLEAR POWER CORPORATION OF INDIA LIMITED

KAKRAPAR GUJARAT SITE,

ANUMALA,

GUJARAT -394651

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News