துணிவுக்கே வெற்றி: தியேட்டரை தொடர்ந்து கல்லூரியிலும் மோதிய வாரிசு, துணிவு
Varisu vs Thunivu: வாரிசை வீழ்த்தி துணிவு வெற்றி!! வாரிசு நிஜத்தில் துணிவை வென்றுள்ளது. இது வேறு ஒரு மேடை, வேறு ஒரு களம்!!
வாரிசை வீழ்த்தி துணிவு வெற்றி!! அதற்குள் வெற்றி தோல்வியை எப்படி தீர்மானிப்பது என பலருக்கு கேள்வி எழும். எனினும், வாரிசு நிஜத்தில் துணிவை வென்றுள்ளது. இது வேறு ஒரு மேடை, வேறு ஒரு களம்!! தேனியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் கபடி போட்டியில் வாரிசு அணியை வீழ்த்தி துணிவு அணியினர் வெற்றி பெற்றனர்.
ஏற்கனவே வாரிசா துணிவா என சமூக வளைத்தளம் உட்பட பல இடங்களில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் போட்டியில் உள்ளனர். இந்நிலையில் தேனியில் தனியார் மகளிர் கல்லூரியில் பொங்கல் கபடி போட்டி நடைபெற்றது. இதில் வாரிசு அணி துணிவு அணி என்ற பெயரில் கபடி போட்டியில் மாணவிகள் கலந்து கொண்டது கூடுதல் சுவாரசியத்தை ஏற்படுத்தியது.
தேனி மாவட்டம் வடபுதுப்பட்டியில் தனியார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தோறும் கல்லூரி வளாகத்தில் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடுவது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொங்கல் கொண்டாட்டம் நடைபெறாமல் இருந்த நிலையில் இவ்வாண்டு பொங்கல் கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
மேலும் படிக்க | குடும்பங்கள் கொண்டாடும் ‘வாரிசு’ படத்தின் வசூல் என்ன? அப்செட்டில் விஜய் ரசிகர்கள்?
இந்த பொங்கல் கொண்டாட்டத்தில் கல்லூரி மைதானத்தில் மாணவிகள் ஒவ்வொருவரும் குழு குழுவாக மாவிலை தோரணங்கள் கட்டி கரும்பு, மஞ்சள், வைத்து சூரிய வழிபாடு நடத்தி புதுப்பானையில் பொங்கல் வைத்தனர். பொங்கல் பொங்கி வரும் போது 'பொங்கலோ பொங்கல்' என்றும் குழவையிட்டும் பொங்கலை கொண்டாடினர்.
பின்னர் மாணவிகளுக்கான பானை உடைக்கும் போட்டி, கபடிப் போட்டி, பாட்டிலில் தண்ணீர் நிரப்புவது போன்ற பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் கபடிப் போட்டியில் 'துணிவு அணி' 'வாரிசு அணி' என்ற பெயரில் மாணவிகள் குழு களம் இறங்கியது.
இதில் வாரிசு அணி 9 புள்ளிகளும் துணிவு அணி 12 புள்ளிகள் பெற்றதன் காரணமாக துணிவு அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தியேட்டரில் வாரிசு துணிவு திரைப்படம் மோதிக் கொண்ட நிலையில் கல்லூரி விளையாட்டு போட்டியிலும் வாரிசு அணி, துணிவு அணி என மாணவிகள் பங்கேற்றது மோதிக்கொண்டது கல்லூரியில் உள்ள அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
தமிழர் திருநாளாம் தைப்பொங்கலையொட்டி வாரிசு மற்றும் துணிவு என இரண்டு மிகப்பெரிய படங்கள் வெளியாகி ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளன. வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் வாரிசு பேமிலி எண்டர்டெயினர் படம் என்பதால் குடும்பங்கள் கொண்டாடும் லிஸ்ட்டில் இணைந்துள்ளது. அதேநேரத்தில் விறுவிறு கதைக்களம் கொண்ட துணிவு படம் அஜித் ரசிகர்களையும் தாண்டி பலரையும் கவர்ந்துள்ளது. எதிர்பார்த்ததுபோலவே விஜய்யின் வாரிசும், அஜித்தின் துணிவும் போட்டி போட்டுக் கொண்டு பாக்ஸ் ஆஃபீஸில் கல்லா கட்டி வருகின்றன.
மேலும் படிக்க | வாரிசு vs துணிவு பாக்ஸ் ஆஃபீஸ் ரிப்போர்ட்; எகிறியடித்தது வாரிசா? துணிவா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ