சென்னை: பா.ஜ.க நிர்வாகியும் பிரபல சின்னத்திரை நடிகையுமான ஜெயலட்சுமி மீது பண மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுவினர் ஜெயலட்சும் மீது புகார் அளித்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தாங்கள் வாங்கிய கடனுக்கு ஈடான தொகையை செலுத்திய பிறகும் கூட, ஜெயலட்சுமி, தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டுவதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பணம் கேட்டு இரவு நேரங்களில் ஆண்களை வீட்டுக்கு அனுப்பி ஜெயலட்சுமி மிரட்டுகிறார் என்றும் சுய உதவிக்குழு மகளிர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். 


சின்னத்திரையின் பிரபலமான நடிகையான (TV Actress) ஜெயலட்சுமி பாஜக-வில் பொறுப்பு வகித்து வருகிறார். பண மோசடி தொடர்பாக இவர் மீது பாடியை சேர்ந்த ஒரு பெண்மணி சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தான் வசிக்கும் பகுதியில் மற்ற பெண்களுடன் சேர்ந்து ஒரு சுய உதவிக்குழுவை நடத்தி வருவதாகவும், பா.ஜ.கவைச் சேர்ந்த ஜெயலட்சுமி அவரது மகளிர் சுய உதவிக் குழுவுக்கு வங்கி மூலம் 10 பைசா வட்டியில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி 9 பெண்களுக்கு வங்கி மூலம் லோன் பெற்றுத் தந்தார் என்றும் அந்த பெண் கூறியுள்ளார். அதற்காக ஒவ்வொருவரிடம் இருந்து ஜெயலட்சுமி அவரவர் வங்கி காசோலைகளை ஜாமினாக பெற்றதாகவும் கூறப்படுகிறது.


ALSO READ: பிஜேபியில் சேர பணம் வாங்கவில்லை, அமைச்சர் பதவி கொடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது


சுய உதவிக்குழு பெண்கள் மாதா மாதம் பணம் செலுத்தி வந்த நிலையில், தற்போது அவர்கள் கொடுத்த தொகையை வட்டி என்று கூறி, இன்னும் அசல் தொகையை கொடுக்கவில்லை என்று ஜெயலட்சுமி கூறுகிறார் என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. 


இது மட்டுமின்றி, ஜெயலட்சுமி, அவரது வழக்கறிஞர் மற்றும் சிலர் தன் வீட்டுக்கு வந்து தன்னையும், தனது வீட்டில் இருந்தவர்களையும் மிரட்டியதாகவும் தெரிவித்துள்ள அந்த பெண், இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார். 


ஏற்கனவே பல பாஜக (BJP) உறுப்பினர்கள் பண மோசடி வழக்குகளில் சிக்கி வருகின்றனர். இந்த நிலையில், சின்னத்திரையின் பிரபல நடிகையான ஜெயலட்சுமி மீது அளிக்கப்பட்டுள்ள மோசடி புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


ALSO READ: தொப்பூரில் அடுத்தடுத்து 3 லாரிகள் மோதி விபத்து; 2 பேர் பலி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR