தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே நின்றிருந்த லாரி மீது அடுத்தடுத்து 3 லாரிகள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் திருச்சி மற்றும் எடப்பாடியை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 14 பேர் காயமடைந்தனர். தருமபுரியில் இருந்து கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யும் வாகனம் நேற்று நள்ளிரவில் இரவு சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த வாகனம் தருமபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் அடுத்த புதூர் அருகே சென்றுக்கொண்டிருந்தபோது திடீரென பழுது ஏற்பட்டது.
வாகனத்தை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு வாகனத்தில் பழுது நீக்கும் பணியில் திருச்சி (Trichy) மற்றும் விருதுநகர் பகுதியைச் சேர்ந்த 12 பேர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து கருங்கற்கள் பாரம் ஏற்றி சேலம் (Salem) நோக்கி சென்று கொண்டிருந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நின்றிருந்த கழிவுநீர் சுத்திகரிப்பு வாகனத்தின் மீது திடீர் என மோதியது.
மறுபுறம் பின்னால் குஜராத்தில் இருந்து அவினாசிக்கு உருளைக்கிழங்கு ஏற்றி வந்த லாரி மற்றும் அதனையடுத்து வந்த மற்றொரு சரக்கு வாகனம் என அடுத்து மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ALSO READ | விபத்துகளில் அதிகம் சிக்கும் தனி நபர் கார்கள்! உண்மை பின்னணி என்ன?
இந்நிலையில் இந்த விபத்தில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா எடமலைபுதூரை சேர்ந்த ரத்தினவேல் , மற்றும் சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த எட்டிமாங்குறிச்சியை சேர்ந்த சித்தையன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 14 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தொப்பூர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மற்றும் பாளையம் சுங்கச்சாவடி பணியாளர்கள் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. மேலும் இந்த விபத்து தொடர்பாக தருமபுரி- சேலம் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சேலம் டி.ஐ.ஜி மகேஸ்வரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் ஆகியோர் சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் விபத்துக்குள்ளான ஒரு வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து உள்ளதால் அதை மீட்கும் பணிகள் நடந்தது வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR