பொங்கல் பண்டிகையையொட்டி 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு (Pongal gift tamilnadu)நியாய விலை கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.  தைப் பொங்கல் பண்டிகையை பொது மக்கள் கொண்டாடும் வகையில் கரும்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய 21 பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.  இதன் மூலம் சுமார் 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்: முல்லைவேந்தன்


இந்நிலையில் பல்வேறு இடங்களில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் தாமதமும்,  தரமாக இல்லை எனவும் புகார் எழுந்தது. குறிப்பாக எதிர்கட்சி பிரமுகர்கள் இதனை பெரிதாக பேசி வந்தனர்.   புளி,  வெள்ளம் உள்ளிட்ட பொருட்கள் தரமாக இல்லை என்றும், சில இடங்களில் 21 பொருட்களுக்கு பதிலாக 17 முதல் 19 பொருட்கள் மட்டுமே தரப்பட்டது போன்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தது.



இதனை சரிசெய்ய முதலமைச்சர் (TN Chief Minister) நேரடியாக நியாய விலை கடைகளுக்கு சென்று ஆய்வு செய்ததுடன், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேரடியாக ஆய்வு செய்து பொங்கல் பொருட்கள் விநியோகம் பணியை விரைவுப்படுத்துமாறு அறிவுறுத்தி இருந்தார்.  இருப்பினும் இந்த பிரச்சினை தீராது நாளுக்கு நாள் அதிகரித்து  கொண்டே சென்றது.  இதற்கு ஒரு முடிவுகட்ட முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச்செயலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற  உள்ளது. இந்த கூட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக எழுந்துள்ள புகார் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



ALSO READ | பொங்கல் தொகுப்பில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது: எடப்பாடி பழனிச்சாமி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR