அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு பக்தர்கள் மலைக்கோயில் செல்வதற்காக தெற்கு கிரிவீதியில் இருந்து ரோப்காரும், மேற்கு கிரிவீதியில் இருந்து வின்ச்சும் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது அமைக்கப்பட்டுள்ள ரோப்கார் 2004ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது. 1 மணிநேரத்திற்கு சுமார் 400 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். இதனால் பக்தர்கள் ரோப்காரில் பயணம் செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. இதன் காரணமாக கூடுதலாக 2வது ரோப்கார் அமைக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க - அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் நெஞ்சு வலி! மருத்துவமனையில் அனுமதி!


இதற்காக கடந்த அதிமுக ஆட்சியில் 2017ம் ஆண்டு இத்திட்டத்திற்கு ஒப்புதல் தரப்பட்டது. சுமார் ரூபாய் 73 கோடி மதிப்பீட்டில் நவீன முறையில் 2வது ரோப்கார் அமைக்க 2018 ஆம் ஆண்டு வாஸ்து பூஜைகள் செய்யப்பட்டு பணிகள் துவங்கியது.  இந்த ரோப்கார் காற்று மற்றும் மழை நேரங்களில் கூட இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1 மணி நேரத்தில் சுமார் 1200 பேர் பயணிக்கலாம். சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம், பிரான்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ரோப்கார் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இரண்டு ஆண்டுகள் கொரோனா காலம் என்பதால் பணிகள் ஏதும் நடைபெறாமல் இருந்தது, பின்னர் தற்போது வெளிநாட்டு நிறுவனம் கூடுதலாக கோவில் நிர்வாகத்திடம் 30 கோடி கேட்டு உள்ளதால் கோவில் நிர்வாகம் பணம் கொடுக்க மறுத்துள்ளது. பிரான்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என அறங்காவலர்கள் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி சென்னையில் உள்ள இந்து அறநிலைத்துறை ஆணையர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


ஏற்கனவே 36 பேர் செல்ல கூடிய மூன்றாவது மின் இழுவை ரயில் நன்றாக இயங்கிக் கொண்டிருந்த நிலையில் அதை நிறுத்திவிட்டு, அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் தனது சொந்த செலவில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் புதிய பெட்டியை 72 பேர் பயணிக்கும் வகையிலும், குளிர்சாதன வசதி, கண்காணிப்பு கேமரா உள்ளிட்டவைகளை நவீன பெட்டி பொறுத்தி பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை யானையை இழுக்க எலியா என ஐஐடி குழு நிராகரிப்பு செய்த நிலையில் தற்போது அறங்காவலர் குழுவினரால் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனம் 30 கோடி ரூபாய் கூடுதலாக கேட்கிறார்கள் என்று இந்த ஒப்பந்தகரை மாற்ற வேண்டும் என கடிதம் அனுப்பி உள்ளது. இதனால் 2 வது ரோப்கார் திட்டம் ரத்து செய்ய வாய்ப்புள்ளது. மீண்டும் வேறொரு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு விரைவில் ரோப்கார் திட்டம் பணிகள் துவங்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பழனி கோவிலுக்கு புதிய அறங்காவலர் குழு வருகையின் காரணமாக பல்வேறு திட்டங்கள் உருவாகலாமே தவிர பல திட்டங்களை தவிடு பொடியாகயாக்கி கொண்டிருக்கிறார்கள் என்பது சமூக ஆர்வலர்களின் குமறலாக உள்ளது.


மேலும் படிக்க - அரியலூர் வெடி விபத்து: உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி -முதல்வர் அறிவிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ