சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வரும் நிலையில் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் இன்று காலை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. சிறை மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிசோதித்த நிலையில் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலமாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க | ஜெகத்ரட்சகன் வீட்டில் ரகசிய அறை இருக்கிறதா? தீவிராக தேடும் வருமானவரித்துறை
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தில் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை ஜூன் 14 ஆம் தேதி கைது செய்தது. அதனைத் தொடர்ந்து அவருடைய குடும்பத்தினருடன் தொடர்புடையவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை பல கட்டங்களாக சோதனை மேற்கொண்டு ஆவணங்களை கைப்பற்றியது. இந்த வழக்கு தொடர்பாக குற்றப் பத்திரிக்கை ஆகஸ்ட் 12 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பிறகும் சென்னை கோவை கரூர் நாமக்கல் ஆகிய ஊர்களில் பல்வேறு இடங்களில் அமலாக்குத்துறை அதிகாரிகளின் மறுபடியும் அதிரடி சோதனைகளை நடத்தினர். மீண்டும் செந்தில் பாலாஜி தொடர்பான வீடுகளில் சோதனை அமலாக்கத்துறை நடத்தியது இன்னும் பல ஆதாரங்களை தேடுவது உறுதி செய்துள்ளது. செந்தில் பாலாஜி மற்றும் அவரின் குடும்பத்தினர் செய்த பண பரிவர்த்தனைகள் சொத்து ஆவணங்களை அமலாக்கத் துறை தேடுகின்றதா என விவாதமும் எழுந்துள்ளது.
ஆவணங்கள் அழிக்க பட்டு இருக்கலாம் என்ற சந்தேகமும் வந்துள்ளது. இந்த நிலையில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட மறுநாளில் கோவை மேயர் கல்பனாவின் தம்பி வசிக்கும் கோவை மணியகாரம்பாளையம் வீட்டுக்கு அருகில் சில காகித ஆவணங்களை அங்குள்ள மைதானத்தில் கொட்டி குமார் தீ வைத்து எரித்ததாக வீடியோ ஒன்றும் வெளியானது. அதில் எரிக்கப்படாத சில காகிதங்களில் பணப்பரிவர்த்தனை நடந்ததற்கான வார்த்தைகளும் எழும்பின. இது குறித்து கோவை மேயர் கல்பனாவின் தம்பி குமாரிடம் தொடர்பு கொண்டு கேட்கையில், அது தவறான தகவல், குப்பையை மட்டுமே எரித்தேன் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றது. இது குறித்து சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் சமீபத்தில், தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் சென்னை ராதா இன்ஜினியரிங் நிறுவனம் சார்பில் கரி கையாளும் பணி மற்றும் சாம்பல் கையாளும் பனி குறித்து வருமான வரிதுறை அதிகாரிகள் சுமார் ஆறு மணி நேரமாக நடத்திய சோதனை நிறைவு முக்கிய ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச் சென்றனர். மேலும் சென்னை ராதா இன்ஜினியரிங் துணை நிறுவனமான திவ்யா ட்ரேடர்ஸ் என்ற சாம்பல் கையாளும் நிறுவனத்தின் கணக்குகள் குறித்தும் சோதனை நடத்தினர். இதேபோன்று தூத்துக்குடி துறைமுகத்தில் கரி கையாளும் தளத்தில் செயல்பட்டு வரும் சென்னை ராதா இன்ஜினியரிங் சார்பில் கப்பலில் இருந்து கரி இறக்கும் பகுதி என இரண்டு இடங்களிலும் சுமார் பத்துக்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தூத்துக்குடி அனல்மின் நிலையம் மற்றும் துறைமுகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க | குடும்பத் தலைவிகளுக்கு சர்ப்ரைஸ் - மாதம் 1000 ரூபாய் - அரசின் திடீர் அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ