அண்ணாமலைக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது - நக்கலாக டீல் செய்த உதயநிதி ஸ்டாலின்
அண்ணாமலை கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நக்கலாக கூறியது பாஜகவினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும். கொசு மலேரியா, டெங்கு, கொரோனா போன்றது சனாதனம், இதனை இம்மண்ணில் இருந்து ஒழிக்க வேண்டும். எதிர்க்க வேண்டியது என்ற பேச்சுக்கே இடமில்லை, ஒழிப்பது தான் ஒரே வழி என ஒரு சில நாட்களுக்கு முன்பு காட்டமாக பேசினார். அவருடைய இந்தப் பேச்சு இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சாதி மதங்கள் மூலம் மக்களை பேதமைப்படுத்தும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறியதை, இந்துக்களுக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் பேசிவிட்டதாக கொளுத்திப்போட்டுள்ளனர்.
மேலும் படிக்க | தமிழ்நாட்டின் பப்பு உதயநிதி... அண்ணாமலை அடுத்தடுத்து அட்டாக்!
மத்திய பாஜக உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோர் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் தேர்தல் பிரச்சாரங்களில் உதயநிதி ஸ்டாலினின் பேச்சைக் குறிப்பிட்டு விமர்சித்து வருகின்றனர். இதனால் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருப்பதுடன், மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது குறித்து செய்தியாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பினர். சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என நீங்கள் கூறியதை இந்து மதத்தினரை குறி வைத்து தாக்குவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறாரே என்றனர். இந்த கேள்வியை உள்வாங்கிக் கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், " அண்ணாமலை யாரு? அவரு கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.
சனாதனம் குறித்த கருத்தில் நான் தெளிவாக இருக்கிறேன். எந்த மத்தினரையும் புண்படுத்தவில்லை. சாதி ரீதியாக மக்களை பிரித்து, முடக்கியிருப்பதை தான் கேள்வி கேட்டிருக்கிறேன். இதற்கான எத்தனை வழக்குகள் வந்தாலும் சந்திக்க தயார். என்னளவில் இருந்து நான் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்" என மீண்டுமொருமுறை கூறியுள்ளார். அவரின் இந்த பதில் அண்ணாமலை ஆதரவாளர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அண்ணாமலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புறக்கணிப்பது முதல் முறை அல்ல. பல்வேறு பேட்டிகள் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பிலும் அவர் குறித்த கேள்விகளை காமெடியாகவே உதயநிதி ஸ்டாலின் டீல் செய்வதாக பாஜகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும் படிக்க | சனாதனம் குறித்த உதயநிதியின் பேச்சுக்கு அமித் ஷா கண்டனம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ