பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூரு சிறையில் இருக்கும் இளவரசிக்கும் கொரோனா தொற்று இருப்பதாக தெரியவந்துள்ளது. எனவே, இளவரசியும் மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெயலலிதாவின் நெருக்கமான தோழி சசிகலாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். சசிகலாவின் நெருங்கிய உறவினரான இளவரசியும், அதே சிறையில் இருந்தார். அவருக்கு தொற்று கண்டறியப்பட்ட பிறகு இளவரசிக்கும் கொரோனா (Corona) பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் பாதிப்பு  உறுதியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற இளவரசியும் 2017 பிப்ரவரி முதல் பெங்களூருவில் (Bengaluru) உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார்.  


 ஜனவரி 27 ஆம் தேதி சசிகலா (Sasikala) விடுதலை செய்யப்படவுள்ளதாக கர்நாடகா சிறைதுறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அவரது விடுதலை நாள் அறிவிக்கப்பட்டதிலிருந்து தமிழக தேர்தல் களத்தில் பல பரபரப்பான நிகழ்வுகள் நடக்கத் தொடங்கின. சசிகலாவின் குடும்பத்தினரும், அமமுக (AMMK) கட்சியினரும் அவரது விடுதலைக்காக பலமான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


ஆனால் இன்று வெளிவந்த அடுத்தகட்ட பரிசோதனையில் சசிகலாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Also Read | சசிகலாவின் உயிருக்கு ஆபத்து: திவாகரன் கிளப்பிய சந்தேகத்தால் பரபரப்பு


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR