பிரதமர் விவேகானந்தர் இல்லம் வருவதால் வாக்காளர்களை எந்த விதத்திலும் பாதிக்காது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியா கூட்டணி மோடியை கண்டு அச்சப்படுவதாக விமர்சித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில் அமமுகவின் நிலைப்பாடு என்ன என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருந்துவரும் நிலையில், பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்து போட்டியிடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமமுகவுக்கு 5 தொகுதிகள் வரை வழங்கப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி வருகிறது.
வேலூர் மாவட்டம் காகிதப்பட்டறை பகுதியில் ஒரே தெருவில் இயங்கும் ஆறு மதுபானக் கடைகளால் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் அதிகரிக்கின்றன. பொதுமக்களை பாதிப்புக்குள்ளாக்கும் மதுபானக் கடைகளை அகற்ற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிடிவி தினகரன், பொதுச்செயலாளர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்
TTV Dhinakaran: பாஜக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். தங்களுக்கு இருக்கும் குக்கர் சின்னத்திலேயே போட்டியிடுவோம் என்றும் கூறியுள்ளார்.
பாஜக -அமமுக கூட்டணி குறித்து டிடிவி தினகரனுடன் அண்ணாமலை தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், நாளை பிரதமர் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக மாவட்ட செயலாளருடன் தனித்தனியாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவது, யார் எல்லாம் தவழ்ந்து வந்தவர்கள் என்று தெரிந்து கொள்வதற்குத்தான் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமியிடம் ஒருபோதும் அடைக்கலம் ஆக மாட்டேன் என தெரிவித்திருக்கும் டிடிவி தினகரன், அவரை வீழ்த்தாமல் ஓயமாட்டேன் என அமமுக தொண்டர்கள் மத்தியில் ஆவேசமாக பேசியுள்ளார்.
மூக்கையாத்தேவருக்கு அதிமுக ஆட்சியில் சிலை நிறுவப்பட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயக்குமார் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து உசிலம்பட்டியில் அமமுகவினர் ரகளையில் ஈடுபட்டதால் கூடத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
TTV Dinakaran: அதிமுகவை நிறுவிய எம்ஜிஆர் கொண்டுவந்த விதியை மாற்றி அதிமுக பொதுச்செயலாளராக ஆக எடப்பாடி பழனிசாமி துடித்துகொண்டிருக்கிறார் என டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்பது எடப்பாடி பழனிசாமிக்கு தற்காலிக கிடைத்திருக்கும் வெற்றி மட்டும் தான் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
North Indian Workers Attack TN Student: தமிழக மாணவர்கள் மற்றும் வட மாநிலத்தவர்கள் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தன் டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தலில் அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க இயலாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள நிலையில், அமமுக வேட்பாளர் ஏ.எம். சிவபிரசாந்த் போட்டியிடமாட்டார் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் பொதுச்செயலா் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
Erode East Bypolls Fight: காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, அமமுக, நாம் தமிழர் கட்சி என 5 கட்சிகள் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றன. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம் என்று இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.