தடுப்பூசி பற்றாக்குறை! புனேவில் இருந்து 6 லட்சம் டோஸ் தமிழகம் வருகை!
புனேவில் இருந்து 6 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
கொரோனா வைரசின் இரண்டாவது அலை இந்தியாவை பாடாய் படுத்தி வருகிறது. தினசரி தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில், இறப்பு என்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருப்பது பீதியை கிளப்பியுள்ளது.
தற்போது பூதாகாரம் எடுத்து வரும் கொரோனா வைரசின் (Coronavirus) மாறுபட்ட வகை, பல வகைகளில் முந்தைய வகையை விட வேறுபட்டுள்ளது. இந்த வகையின் தீவிரம் மிக அதிகமாக உள்ளதாக மருத்துவர்களும் எச்சரித்து வருகின்றனர். இந்த மாறுய்பாட்டின் பரவும் விதமும் பாதிக்கும் விதமும் முந்தைய வைரசின் வகையை விட அதிகமாகவும் தீவிரமாகவும் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இதனால், பொதுமக்களுக்கு தடுப்பூசியை (Vaccination) செலுத்தும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இதுவரையில் 12.5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) போடப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசி டோஸ்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தி இருந்தது.
அதன்படி, புனேவில் (Pune) இருந்து 6 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பூசி தடையின்றி கிடைப்பதற்காக கூடுதல் டோஸ்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த மாத இறுதிக்குள் கூடுதலான மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை போட திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதகிடையில் இந்த தடுப்பூசிகள் 48 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு போடப்பட்டுள்ளன. மேலும், தகுதியானவர்கள் தானாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு தமிழக அரசு பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR