கொரோனா நோயாளிகள் கொண்டாடிய ’பொங்கல்’
கோவையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் விழா இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு இடையே மிகுந்த எச்சரிக்கையுடன் வீடுகளில் பொங்கல் வைத்து பாரம்பரிய விழாவை சிறப்பித்தனர். கோவையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளும் இந்த பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.
ALSO READ | தமிழர் திருநாளில் கியூட்டான புகைப்படங்களை வெளியிட்ட தன்யா..!
கோவையில் கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் கொடிசியா வளாகத்தில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். அங்கு 200-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இன்று பொங்கல் விழாவையொட்டி அங்கு சிகிச்சை பெற்று வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் கொடிசியா வளாகத்திற்குள்ளேயே பொங்கல் வைத்து கொண்டாடினர்.
சிகிச்சை பெறுவோருக்கு உணவு சமைக்க பயன்படுத்தும் பாத்திரங்களைக் கொண்டு பொங்கல் வைத்து கும்மி பாட்டு பாடி, பாரம்பரிய முறையில் பொங்கலை கொண்டாடினர். மேலும், சிகிச்சை பெறுபவர்களை பார்க்க வரும் உறவினர்களிடம் கரும்பு, வண்ண கோலப்பொடி வாங்கித் தர சொல்லி வண்ண கோலமிட்டு கரும்புகளால் அலங்கரித்து, பொங்கல் வைத்து கொண்டாடினர்.
ALSO READ | ஜல்லிக்கட்டு; 24 காளைகளை அடக்கிய இளைஞர்..! முதலமைச்சர் வழங்கிய கார் பரிசு
பொங்கல் விழாவை இல்லத்திலிருந்து கொண்டாட இயலாத சூழலில், இவ்வாறு புதிய நபர்களுடன் கலந்து பொங்கல் வைத்துக் கொண்டாடுவது புதிய அனுபவமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR