COVID-19 in Tamil Nadu: இன்றைய கொரோனா நிலவரம்! உங்கள் மாவட்டத்தில் எப்படி?
இன்று 1,904 பேர் குணமடைந்து (Today`s Discharged) வீடு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 7,47,752 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
சென்னை: தமிழகத்தில் இன்று 1,619 பேருக்கு கொரோனா தொற்று (Corona Positive) உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா (Coronavirus) தொற்றால் 17 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 483 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டு உள்ளது.
தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் (COVID in Tamil Nadu) பாதிக்கப்பட்டவர்களின் மொத்தம் எண்ணிக்கை 7,71,614 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல மாநிலத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 11,622 ஆக உயர்ந்தது.
அதேநேரத்தில் இன்று 1,904 பேர் குணமடைந்து (Today's Discharged) வீடு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 7,47,752 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
ALSO READ | நிவர் புயல் காரணமாக மொத்தம் 15 ரயில்களை ரத்து செய்து தெற்கு ரயில்வே உத்தரவு
12,245 பேர் மருத்துவமனை மற்றும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 65,012 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. இதுவரை தமிழகத்தில் 1,16,06,250* பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நிலவரம்: 23-11-2020
கொரோனா பாதிப்பு - 1,619
சிகிச்சை பெற்று வருபவர்கள் - 12,245
பரிசோதிக்கப்பட்ட மாதிரிகள் - 65,012
குணமடைந்து வெளியேறியவர்கள் - 1,904
இறப்பு - 17
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR