நிவர் புயல் காரணமாக மொத்தம் 15 ரயில்களை ரத்து செய்து தெற்கு ரயில்வே உத்தரவு

வடக்கு டெல்டா மாவட்டங்களான தமிழ்நாடு (Tamil Nadu) மற்றும் புதுச்சேரி (Puducherry) முழுவதும் பலத்த மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 65 கி.மீ வேகத்தில் காற்றின் வேகம் மற்றும் வழக்கத்தை விட இரண்டு மீட்டர் உயரமுள்ள அலைகள் ஆகியவை அடுத்த இரண்டு நாட்களில் கடலோரப் பகுதிகளுக்கு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 23, 2020, 07:59 PM IST
  • வழக்கத்தை விட இரண்டு மீட்டர் உயரமுள்ள அலைகள் அடுத்த இரண்டு நாட்களில் கடலோரப் பகுதிகளுக்கு ஏற்படும்.
  • முழுவதும் ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான முன்பதிவு கட்டணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
  • மொத்தம் ஒன்பது ரயிகள் பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தை சேர்ந்த 12 குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
நிவர் புயல் காரணமாக மொத்தம் 15 ரயில்களை ரத்து செய்து தெற்கு ரயில்வே உத்தரவு title=

வானிலை செய்திகள்: நிவர் புயல் காரணமாக நாளை (நவம்பர் 24) மற்றும் நாளை மறுநாள் (நவம்பர் 25) ஆம் தேதிகளில் சில ரயில்களை பகுதியாகவும், சில ரயில்களை முழுமையாக ரத்து செய்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.அதாவது 24 ஆம் தேதி இரண்டு ரயில்களும், 25 ஆம் தேதி நான்கு ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதேபோல மொத்தம் ஒன்பது ரயில்களை பகுதியாகவும் ரத்து செய்துள்ளது. எனவே ரயிலில் பயணம் செய்யும் மக்கள் வெளியில் செல்லும் போது முழு தகவலையும் தெரிந்துக்கொண்டு சென்றால், சிரமங்களை தவிர்க்க முடியும்.

மேலும் முழுவதும் ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான முன்பதிவு கட்டணத்தை முழுவதுமாக திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

இந்திய வானிலை ஆய்வுத் துறை (India Meteorological Department) வெளியிட்ட சூறாவளி எச்சரிக்கையைத் தொடர்ந்து, தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தை (National Disaster Response Force) சேர்ந்த 12 குழுக்கள் தமிழகத்தின் வடக்கு மற்றும் மத்திய கடலோர மாவட்டங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. கடலூரில் ஆறு அணிகள், புதுச்சேரியில் இரண்டு, காரைக்கலில் ஒரு அணிகள், சென்னையில் இரண்டு அணிகள் மற்றும் மதுரையில் ஒரு அணிகள் பாதுக்காப்பு பணிகளை மேற்கொள்ள நிறுத்தப்பட்டுள்ளன.

No description available.

தற்போது, ​​குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையின் தென்கிழக்கில் 520 கி.மீ. வேகத்தில் உருவாக்கியுள்ள காற்று திங்கள் இரவுக்குள் சூறாவளி புயலாகவும், செவ்வாய்க்கிழமை அன்று கடுமையான சூறாவளியாகவும் (Nivar Cyclone) மாறும் என்று சென்னை பிராந்திய வானிலை ஆய்வு மையம் (Chennai Meteorological Department) தெரிவித்துள்ளது. இது நவம்பர் 25 பிற்பகலுக்குள் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது என்று எஸ்.பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

ALSO READ |  "வருகிறது நிவர் புயல்...!!!" என்ன செய்ய வேண்டும்? , செய்யக்கூடாது?

வடக்கு டெல்டா மாவட்டங்களான தமிழ்நாடு (Tamil Nadu) மற்றும் புதுச்சேரி (Puducherry) முழுவதும் பலத்த மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 65 கி.மீ வேகத்தில் காற்றின் வேகம் மற்றும் வழக்கத்தை விட இரண்டு மீட்டர் உயரமுள்ள அலைகள் ஆகியவை அடுத்த இரண்டு நாட்களில் கடலோரப் பகுதிகளுக்கு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளன. மேலும் மீனவர்கள் புதன்கிழமை வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சூறாவளி புயல் கடும் நிலச்சரிவை ஏற்படுத்தும் எனக் கணிக்கப்படுகின்றன.

திங்களன்று, முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி (Chief Minister Edappadi K Palaniswami) சூறாவளி முன்னெச்சரிக்கை குறித்து தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். கோவிட் -19 (Covid-19) நெறிமுறைகளின்படி, தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை வெளியேற்றி நிவாரண முகாம்களில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை உறுதி செய்வதோடு, மாவட்ட அதிகாரிகளுக்கு தேவையான எச்சரிக்கைகள் வழங்கப்பட்டு உள்ளதாகவும், நீர்நிலைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

ALSO READ |  நிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்: எச்சரிக்கை நிலையில் NDRF

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News