திருச்சி: அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு (Senthil Balaji) கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதால், அவரை திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டில் நாளுக்கு அதிக அளவில் கொரோனா தொற்று பரவி வருகிறது. அதிலும் மகாராஷ்ட்ரா மாநிலத்திற்கு அடுத்தப்படியாக, தமிழகத்தில் அதிக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மத்திய, மாநில அரசுகள் இணைந்து, நோயை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக அரசும் மாவட்ட நிர்வாகங்களும் இணைந்து பல அதிரடி நடவடிக்கையையும் எடுத்து வருகிறது.


ALSO READ | அதிமுக ஆட்சியை அகற்றவே திமுகவில் இணைந்தேன்: செந்தில் பாலாஜி


கொரோனா நோயைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், காவலர்கள் மற்றும் அவர்களுடன் சேர்ந்து அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் போராடி வருகின்றனர். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பலருக்கு COVID-19 தொற்று பரவி வருகிறது.


இந்நிலையில், இன்று அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை சரியில்லாததால், அவர் திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டத்தில், அவருக்கு Coronavirus தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.


இதுவரை தமிழகத்தில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் என மொத்தம் 35 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.