சாமியார் வேடமணிந்த 4 பேர் பணம் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம்
சாமியார் வேடமணிந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென வீடுகளுக்குள் புகுந்து பரிகார பூஜை செய்வதாக பணம் கேட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் செல்வலட்சுமி புரம், கிருஷ்ணாபுரம், பகுதியில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் தெருக்களில் ஆந்திர மாநிலம் பள்ளிப்பட்டு பகுதியில் இருந்து வருவதாகக் கூறிக் கொண்டு காவி உடை அணிந்த 4 பேர் கொண்ட கும்பல் வந்தது.
இவர்கள் ஒரு வீட்டின் தகவலை வேறொரு வீட்டில் தெரிந்து வைத்துக் கொண்டு குறிப்பிட்ட வீட்டுக்கு சென்று முன்பின் தெரியாவிட்டாலும் கூட இந்த வீட்டில் பரிகாரம் செய்ய வேண்டும் எனக் கூறி ஆயிரக்கணக்கில் பணம் கேட்டுள்ளனர்.
ALSO READ | திமுக ஒன்றியச் செயலாளர் உட்பட 3 பேர் மீது கொலை வழக்கு பதிவு
இதில் சந்தேகம் அடைந்த சிலர் அவர்களிடம் கேள்விகளை கேட்டதால் தாங்கள் ஆந்திராவில் இருந்து வருவதாகவும் தாங்களே நேரடியாக தங்களுடைய மடத்திற்கு பணங்களை அனுப்பலாம் என போலியான ஒரு முகவரியை கொடுத்துள்ளனர். அவர்கள் கொடுத்த முகவரியில் பொதுமக்கள் விசாரித்தபோது இவர்கள் போலி நபர்கள் என தெரியவந்தது.
ALSO READ | காவலர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்; பெண் தற்கொலை முயற்சி
இதனால் அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். மேலும் சூலூர் பாதிக்கப்பட்ட சிந்தாமணிப்புதூர் பள்ளபாளையம் பாரதிபுரம் பாலு கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் போலி சாமியார்கள் கைவரிசை காட்டி சென்றுள்ளனர். இதுகுறித்து இப்பகுதி பொதுமக்கள் சூலூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
ALSO READ | மகளை தாக்கி ஆபாசமாக பேசியதால் தந்தை தீக்குளிக்க முயற்சி -கோவையில் பரபரப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR