மகளை தாக்கி ஆபாசமாக பேசியதால் தந்தை தீக்குளிக்க முயற்சி -கோவையில் பரபரப்பு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஒருவர் சிறுமிகளை தாக்கி ஆபாசமாக பேசியதால் தந்தை தீக்குளிக்க முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 29, 2021, 01:52 PM IST
மகளை தாக்கி ஆபாசமாக பேசியதால் தந்தை தீக்குளிக்க முயற்சி -கோவையில் பரபரப்பு

கோயம்புத்தூர்: கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் அற்புதராஜ். போஸ்ட்மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டின் அருகில் வசிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய தலைவர் ஜார்ஜ் குப்புசாமி என்பவருக்கும், அற்புதராஜ்-க்கும் இடம் தொடர்பாக பிரச்சனை எழுந்துள்ளது.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அற்புதராஜை அடித்தும் தகாத வார்த்தைகளில் பேசியும் ஜார்ஜ் குப்புசாமி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகவும். மேலும் அற்புதராஜின் 8 வயது மகள்களை அடித்தும், தகாத வார்த்தைகளிலும் பேசியும் தொந்தரவு அளித்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனிடையே கடந்த 15 ஆம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அற்புதராஜ் இந்த பிரச்சனையில் நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். ஆனால் அந்த மனு மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற நிலையில், மனமுடைந்த அவர் இன்று காலை தனது இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் மகனுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். அங்கு தான் மறைத்து வைத்திருந்த, பெட்ரோலை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.

ALSO READ |  திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞரை கைது செய்த காவல்துறை

அதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அற்புதராஜை மீட்டு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஒருவர் சிறுமிகளை தாக்கி ஆபாசமாக பேசியதால் தந்தை தீக்குளிக்க முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சில நாட்களுக்கு முன்பு, இதேபோன்ற ஒரு சம்பவம் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோமங்கலம் கிராமத்தில் அரங்கேறியது. அதாவது அதிமுக பிரமுகரான ஜெயபால் மற்றும் அவரது குடும்பத்தை சார்ந்த குணசீலன் ஜான்பீட்டர் சார்லஸ் ஆகியோர் திமுக பிரமுகர் வீட்டில் நுழைந்து, அங்கிருந்த ஜோசப்பின் மனைவி சியாமளா, அவரது மகள்  ஷீலாஜோசப் முதியவர் ஜெயராமன் ஆகியோரை கொலைவெறியுடன்  தாக்கியுள்ளனர். மேலும் அவரது விலை உயர்ந்த ஸ்கார்பியோ காரை அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். வீட்டில் உள்ள பெண்களை தரக்குறைவாக பேசியும் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர்.

Coimbatore riots

அதன்பிறகு, இதுகுறித்து திமுக பிரமுகர் ஜோசப் மற்றும் அவரது குடும்பத்தினர் சோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு தாக்குதல் நடத்திய ஜெயபால் குணசீலன் ஜான்பீட்டர் சார்லஸ் ஆகியோரை காவல்துறையினர் விசாரணை செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ALSO READ |  நள்ளிரவில் மதுவிருந்து, போதையில் அத்துமீறல்: ஆண் நண்பர்களை செருப்பால் அடித்த பெண்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News