காவலர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்; பெண் தற்கொலை முயற்சி

இரவில் சினிமாவிற்கு சென்று திரும்பிய பெண்ணை வீட்டிற்கு பாதுகாப்பாக அழைத்து செல்வதாக கூறி காவலர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் பெண் தற்கொலை முயற்சி.

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 30, 2021, 01:00 PM IST
காவலர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்; பெண் தற்கொலை முயற்சி

மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த  மகேஷ்குமார் (45) திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர் பைப் கடை நடத்தி வருகின்றார். தனது கடையில் பணிபுரியும் 4 ஆண் மற்றும் அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த சுபா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது)  திருமணமாகி விவாகரத்தானவர். ஊழியருடன் கடந்த சனிக்கிழமை இரவு 1.30 மணியளவில் செல்லூர் பகுதியிலுள்ள திரையரங்கில் மாநாடு திரைப்படம் பார்க்க சென்றுள்ளனர். 

திரைப்படம் முடிந்து வீட்டிற்கு செல்லும் போது நேதாஜி சாலை அருகே இரவு பாதுகாப்பு பணியில் இருந்த ஹெட் கான்ஸ்டபிள் முருகன் மற்றும் மற்றொரு காவலர் இருந்துள்ளார். வந்தவர்களை நிறுத்தி விசாரணை செய்த பின் மகேஷ்குமார் தனியாக வீட்டிற்கு செல்லுமாறு கூறியதோடு, சந்தேகமாக இருப்பதால் அவருடன் வந்த இளம்பெண்ணை தானே வீட்டிற்கு பாதுகாப்பாக அழைத்து வருவதாக கூறி மிரட்டி அனுப்பியுள்ளார் 

மேலும் மகேஷ்குமாரின் செல்போன் மற்றும் 11 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்துகொண்டதோடு அவருடைய ஏடிஎம் பின் நம்பரையும் கேட்டு வாங்கியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை வந்து மொபைல் போனையும் வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளனர்.

இதனையடுத்து இளம்பெண்ணை தனது வாகனத்தில் அழைத்துசென்று விபச்சார வழக்கு பதிவு செய்துவிடுவேன் என கூறி வணிக வளாகம் ஒன்றில் அந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து மகேஷ்குமாரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி 30 ஆயிரம் ரூபாய் பணத்தையும் எடுத்துள்ளார்.

ALSO READ | விசாரணை அறிக்கை தர 25 ஆயிரம் லஞ்சம் - பெண் இளநிலை உதவியாளர் கைது.

இதனையடுத்து மகேஷ்குமார் நேற்று சென்னை சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். இந் நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண் இன்று காலை தனது வீட்டில் தூக்கமாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து பெண்ணின் வீட்டிற்கு சென்ற மகேஷ்குமார் பெண்ணிடம் கேட்டபோது சனிக்கிழமை இரவில் காவலர் முருகன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததை கூறியுள்ளார். 

ALSO READ | திமுக ஒன்றியச் செயலாளர் உட்பட 3 பேர் மீது கொலை வழக்கு பதிவு

இதனையடுத்து இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து பணத்தையும் திருடிய காவலர் முருகனை கைது செய்ய கோரி பாதிக்கப்பட்ட பெண்ணின் கடை உரிமையாளரான மகேஷ்குமார் இன்று திலகர்திடல் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.  இதனையடுத்து இந்த புகார் மனுவை தொடர்ந்து காவலர் முருகன் மீது மாநகர தெற்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் காவலர் முருகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

இரவில் பொதுமக்களை பாதுகாப்பதாக கூறி வாகன சோதனையில் ஈடுபட்ட காவலரே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து பணத்தையும் திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் இரவில் சினிமா பார்த்துவிட்டு திரும்பும் நபர்களை காவல்துறையினர் பரிசோதனை என்ற பெயரில் இரவில் மிரட்டி பணம் பறிப்பதாகவும், இரவில் பெண்களுடன் செல்லும் நபர்களை பொய்வழக்கு பதிவு செய்வதாக கூறி பணத்தை பறிப்பதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வருகின்றன.

ALSO READ | மகளை தாக்கி ஆபாசமாக பேசியதால் தந்தை தீக்குளிக்க முயற்சி -கோவையில் பரபரப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News