குமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்தவர் ஜோஸ் கான்பியர் (47). மீனவர். வெளிநாட்டில் மீன்பிடி தொழில் செய்து வந்தார். இவரது மனைவி வனஜா (32 ). இவர்களுக்கு மஞ்சு (13 ), அக்சரா (12) என்ற இரு மகள்கள் உள்ளனர். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த ஜோஸ் கான்பியர் கடந்த டிசம்பர் மாதம் ஊருக்கு வந்தார். பின்னர் குளச்சலில் இருந்து நாகர்கோவில் கோட்டாறு பகுதியில் வாடகை வீட்டுக்கு வந்துள்ளனர்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவர்கள் வசிக்கும் வீடு மாடியில் உள்ளது. இந்த வீட்டுக்கு வந்து 3 மாதங்களே ஆவதால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் இன்னும் சகஜமான பழக்கம் ஏற்படவில்லை. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இவர்கள் வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை வீடுகள் உள் பக்கமாகவே பூட்டப்பட்டிருந்தது. 


இந்த நிலையில் இன்று காலை 11 மணியளவில் மூத்த மகள் மஞ்சு கழுத்தில் காயத்துடன் வெளியே ஓடிவந்து அம்மாவை அப்பா கொலை செய்து விட்டார். அவரும் தற்கொலை செய்துவிட்டார் என்று கூறி கதறி அழுதார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது வீட்டின் படுக்கை அறையில் கட்டிலுக்கு அடியில் வனஜா சடலமாக கிடந்தார்.


மேலும் படிக்க | என்கவுண்டர் பிளான்; கோர்ட்டில் சரண் அடைந்த பிரபல ரவுடி படப்பை குணா


இரண்டாவது மகள் அக்சரா கை கால் கட்டப்பட்ட நிலையில் உயிருடன் இருந்தார். ஜோஸ் கான்பியர் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் கோட்டார் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.


 இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த், சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். கட்டிலுக்கு அடியில் கிடந்த வனஜாவின் சடலத்தை மீட்டனர். சடலம் மிகவும் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மேலும் படிக்க | ரவுடிகள் அட்டகாசம்: ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு, நடத்துனரை மிரட்டி பணம் பறிப்பு


ஜோஸ் கான்பியர் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கழுத்தில் காயங்களுடன் இருந்த மஞ்சுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. ஜோஸ் கான்பியர் மற்றும் வனஜா இருவரும் கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள் ஆவர். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 12ம்தேதி (சனிக்கிழமை ) மதியம் ஏற்பட்ட தகராறில் வனஜாவின் கழுத்தை அறுத்து கொலை செய்ததுடன் முகத்தை கவரால் கட்டி கட்டிலுக்கு அடியில் வனஜாவின் சடலத்தை ஜோஸ் கான்பியர் மறைத்துள்ளார்.


அன்றைய தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த மகள்கள் இருவரும் வீட்டில் இருந்த தந்தையிடம், தாயார் எங்கே எனக் கேட்டுள்ளனர். அப்போது திடீரென மகள்கள் இருவரையும் தாக்கி அவர்களின் வாயில் துணியை வைத்து அமுக்கி கை கால்களை கட்டி இருக்கிறார் .இதனால் கூச்சல் போட முடியாமல் குழந்தைகள் திணறினர். கடந்த இரண்டு நாட்களாக வெளியே வராமல் ஜோஸ் கான்பியர் வீட்டுக்குள் பதுங்கியிருந்து இருக்கிறார். இன்று காலை திடீரென தனது மூத்த மகள் மஞ்சுவின் கழுத்தை கத்தியால் அறுத்து உள்ளார்.


ஆனால் மனம் கேட்காமல் அப்படியே கத்தியை வைத்துவிட்டு கான்பியர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்திருக்கிறார். மஞ்சு கயிறு அவிழ்ந்து வெளியே வந்து இதுபற்றிய தகவல்களை கூறியுள்ளார். அதன் பின்னரே இந்த சம்பவம் அக்கம் பக்கத்தில் தெரிய வந்திருக்கிறது. தற்போது இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


வனஜாவை ஜோஸ் கான்பியர் சனிக்கிழமை கொலை செய்துள்ளார் . மகள்களிடம் இதை மறைக்க படுக்கை அறைக்குள் வைத்து சடலத்தை பூட்டி இருக்கிறார். பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த மகள்கள் வனஜாவை தேடி உள்ளனர். அப்போது வனஜா உறவினர் வீட்டுக்கு சென்றிருப்பதாக கூறியிருக்கிறார். இதையடுத்து வனஜாவின் செல்போனுக்கு மகள்கள் போன் செய்தனர். செல்போன் வீட்டில்தான் இருந்துள்ளது. மேலும் தந்தையின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.


இதையடுத்து வீட்டின் படுக்கை அறைக்குள் குழந்தைகள் செல்ல முயன்றுள்ளனர் இதையடுத்து குழந்தைகளின் கை கால்களை கட்டி போட்டு உள்ளார். இன்று காலையில் ஜோஸ் கான்பியர் தற்கொலை செய்துள்ளார். மூத்த மகள் மஞ்சுவின் கழுத்தை இன்று காலை அறுத்து கொலை செய்ய முயன்றிருக்கிறார். ஆனால் திடீரென மனம் மாறி ஜோஸ் கான்பியர் தற்கொலை செய்து இருக்கிறார். நீண்ட நேரம் போராடி மஞ்சு தான் கட்டப்பட்டு இருந்த கயிற்றை அவிழ்த்து விட்டு வெளியே வந்து உள்ளார்.


வனஜாவை கொலை செய்துவிட்டு ஜோஸ் கான்பியர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பெற்றோரை இழந்த இரு குழந்தைகளும் கதறி அழுதனர். மூத்த மகள் மஞ்சுவுக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அக்சரா தாய், தந்தையின் உடலை பார்த்து கதறி அழுதார். போலீசார் அவரை சமரசம் செய்தனர். இருப்பினும் அக்சரா தேம்பி தேம்பி அழுது கொண்டே இருந்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR