தமிழகத்தில் தொழில் நகரமாகவும், தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டமாக விளங்குகின்ற காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரவுடிகளின் அட்டகாசம் கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் பகுதிகளில் நாளுக்கு நாள் ரவுடிகளின் அட்டகாசம் பெருகி வருகிறது. அந்த பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ரவுடிகள் மாதம்தோறும் தங்களுக்கு அதிகபடியான மாமுல்களை கொடுக்க வேண்டும் என தங்கள் ஆதரவாளர்கள் மூலம் மிரட்டி பல தொழில் நிறுவனங்களை வேலை செய்யவிடாமல் தடுத்து வருவதாகவும் தொடர் புகார்கள் எழுந்தன.
அதையடுத்து சென்னை புறநகர் மாவட்டங்களாக உள்ளாகும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரியாக என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் கூடுதல் காவல் கண்காணிப்பாளரான வெள்ளத்துரை நியமிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது தலைமையில் காவல்துறையினர் ரவுடிகளை ஒதுக்குவதற்கு சிறப்பு தனிப்படைகளை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ALSO READ | Forced Conversion: பள்ளியில் கட்டாய மத மாற்றம்; பள்ளி சிறுமி தற்கொலை..!!
அந்த வகையில் சுங்குவார்சத்திரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் ரவுடீசம் மற்றும் கட்டபஞ்சாயத்து வேலையில் ஈடுபடும் பிரபல ரவுடியாக காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்த படப்பை குணா (42) என்பவரை கைது செய்வதற்கு காவல்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இவர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து அடிதடி என கொடிகட்டி பறக்கும் பிரபல ரவுடி ஆவார். இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல் என 42க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் பிரபல ரவுடி படப்பை குணாவின் ஆதரவாளர்களை ஒடுக்குவதிலும், அவர்களை கைது செய்வதிலும் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றனர்.
கடந்த சில மாதங்ககுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்த படப்பை குணா திடீரென தலைமறைவானார். அதனைத் தொடர்ந்து அவரை கைது செய்ய பல்வேறு முயற்சிகளை காவல்துறையினர் மேற்கொண்டனர்.
மேலும் படப்பை குணாவை என்கவுண்டர் செய்ய போலீஸ் திட்டமிடுவதாக அவரது மனைவி எல்லம்மாள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையில் பிரபல ரவுடி படப்பை குணாவை என்கவுண்டர் செய்யும் திட்டமில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் படப்பை குணா சட்டத்திற்குட்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தால் எந்த வித பிரச்சனையும் எழாது என நீதிபதி கருத்து தெரிவித்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள 17வது குற்றவியல் நீதிமன்ற நடுவர் கிருஷ்ணன் முன்னிலை பிரபல ரவுடி படப்பை குணா சரணடைந்துள்ளார்.
ரவுடி குணா மீது கொலை, கொலை முயற்சி, மிரட்டல், ஆள்கடத்தல் என 45 வழக்குகள் உள்ள நிலையில் தலைமறைவாக இருந்து வந்தார். காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கட்டப் பஞ்சாயத்து, அடிதடியில் ஈடுபட்டதாகவும் குணா மீது புகார் உள்ளது என்பது குறிபிடத்தக்கது.
ALSO READ | திமுகவின் செய்தித் தொடர்பாளர்களா IAS, IPS அதிகாரிகள்? எச்சரிக்கும் ஹெச்.ராஜா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR