தமிழ்நாட்டில் கரையை கடக்கும் புயல், 90 கிமீ தரைக்காற்று வீசும் - வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Tamil Nadu Cyclone | வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறி தமிழ்நாட்டில் நாளை கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Tamil Nadu Cyclone Latest | வங்க கடலிலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்து வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, வலு குறைந்ததாக கூறப்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இப்போது மீண்டும் வலுப்பெற்று இன்னும் 3 மணி நேரத்தில் புயலாக மாற இருக்கிறது. தாழ்வு மண்டலமாக தமிழ்நாட்டில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது புயலாகவே கரையை கடக்க உள்ளது. காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் அருகே இந்த புயல் கரையைக் கடக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் மிக கனமழை பெய்யும். புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு இயல்பாக 70 முதல் 80 கிமீ வேகத்தில் காற்று வீசும், அதிகபட்சமாக 90 கிமீ வேகத்தில் தரைக்காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இப்போது மெதுவாக கரையை நோக்கி நகரத் தொடங்கி இருக்கிறது. புயலாக மாறிய பிறகு கரையை நோக்கி நகரும் வேகம் இன்னும் அதகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்கு திசையில் இருந்து இப்போது வடக்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரத் தொடங்கிவிட்டது. நாகப்பட்டனத்துக்கு கிழக்கே 310 கிமீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து கிழக்கு மற்றும் தென் கிழக்கு திசையில் சுமார் 360 கிமீ தொலைவிலும் புயல் மையம் கொண்டிருக்கிறது. சென்னை தென்கிழக்கில் 400 கிமீ தொலைவிலும் புயல் இருக்கிறது.
ஆனால் கஜா, தானே, வர்தா புயல்கள் போன்ற தீவிரம் இந்த புயலில் இருக்காது. தமிழ்நாடு கடற்கரை முழுவதும் அதி கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இதனால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. மேற்கு மாவட்டங்களிலும் மழை இருக்கும்.
மிதமானது முதல் அதி கனமழை பெய்யவும் வாய்ப்பு இருக்கிறது. புயல் கரையை நோக்கி வரும்போது தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் கனமழை பெய்யும். திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா பகுதிகளிலும் கனமழை பெய்யும். இப்போதைய சூழலில் வங்க கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெதுவாகவே நகர்கிறது. காற்றின் திசை மாறுவதால் புயல் குறித்த தகவல்களில் அடிக்கடி மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இருப்பினும் ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒருமுறையும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நிலையை சென்னை வானிலை ஆய்வு மையம் கண்காணித்துக் கொண்டே இருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ