தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? பேருந்து கட்டண விவரங்கள் இதோ
தீபாவளி பண்டிகைக்கு பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் தருவாயில், தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படும் என்று குற்றசாட்டு எழுந்தது.
நாடு முழுவதும் இந்த ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதனை தொடர்ந்து ஆங்கில புத்தாண்டு, பொங்கல் என தொடர்ந்து பண்டிகைகள் வருகின்றன. இந்த பண்டிகை காலத்தில் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு பேருந்துகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல, அரசு விரைவுப் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. அக்டோபர் 21 ஆம் தேதி பயணம் செய்வதற்கான முன்பதிவு இன்றும், அக்டோபர் 22, 23 தேதிகளில் பயணம் செய்ய நாளையும், நாளை மறுநாளும் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தீபாவளி பண்டிகைக்கு பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் தருவாயில், தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படும் என்று குற்றசாட்டு எழுந்தது.
தீபாவளி பண்டிகையொட்டி ஆம்னி பேருந்து சங்கத்தின் சார்பில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி aoboa.co.in என்ற இணையதளத்திற்கு சென்று நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு என பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வழித்தடத்தில் செல்லும் அனைத்து விதமான பேருந்துகளுக்கும் ஒரே கட்டணம் நிர்ணயிக்க இயலாது என்றும் மோட்டார் வாகன விதிகளின்படி கட்டணம் நிர்ணயிக்க வழிவகை இல்லை என்றும் தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல பிளானா? டிக்கெட் முன்பதிவு தொடங்கியது
தற்போது நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களின் விவரம் பின்வருமாறு:
சென்னை - மதுரை - ரூ.690 முதல் ரூ.1940 வரை நிர்ணயம்
சென்னை - திருச்சி - ரூ.520 முதல் ரூ.1470 வரை நிர்ணயம்
சென்னை - சேலம் - ரூ.530 முதல் ரூ.1690 வரை நிர்ணயம்
சென்னை - ஊட்டி - ரூ.770 முதல் ரூ.2260 வரை நிர்ணயம்
சென்னை - ஈரோடு - ரூ.610 முதல் ரூ.1710 வரை நிர்ணயம்
சென்னை - மார்த்தாண்டம் - ரூ.1030 முதல் ரூ.3000 வரை நிர்ணயம்
சென்னை - நாகர்கோவில் - ரூ.980 முதல் ரூ.2860 வரை நிர்ணயம்
மேலும் படிக்க | பாக்கெட் பாலுக்குள் ஈ? பால் குடிக்க கவருக்குள் புகுந்ததா? ஆவினை கலாய்க்கும் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ