சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில் ஏழு பெண்கள், காவல் ஆய்வாளர், பா.ஜ. பிரமுகர் உள்பட 21 பேரை குற்றவாளிகள் என அறிவித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் இன்று தண்டனை அறிவிக்கப்பட உள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமியைப் பாலியல் தொழிலில் ஈடுபட வைத்து, வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, சிறுமியின் உறவினர் ஷகிதா பானு, உடந்தையாக இருந்த காவல் ஆய்வாளர் புகழேந்தி, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வினோபாஜி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன், நாகராஜ், மாரீஸ்வரன், பொன்ராஜ், மாநகராட்சி ஒப்பந்த ஊழியரான அஜி(எ) வெங்கட்ராமன், ஸ்ரீபெரும்புதூர் கார்த்திக், திரிபுராவைச் சேர்ந்த தெபாசிஸ் நாமா உள்ளிட்ட 26 பேர் மீது போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவர்களில் 22 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் படிக்க | 7 கோடி மக்கள் இந்த நோயால் அவதி, 60 ரூபாய்க்கு மருந்து கிடைக்கும்
கடந்த 2020ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி விசாரித்தார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மாரி, பாஷா, முத்துபாண்டி, மீனா ஆகிய நான்கு பேர் தலைமறைவாக உள்ளனர். மீதமுள்ள 22 பேருக்கு எதிரான வழக்கை விசாரித்து வந்த நிலையில் மாரீஸ்வரன் என்பவர் மரணமடைந்து விட்டார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ராஜலட்சுமி, குற்றம்சாட்டப்பட்ட எண்ணூர் காவல் ஆய்வாளர் புகழேந்தி, மதன்குமார், சாயிதாபானு, சந்தியா, செல்வி, கார்த்திக், மகேஸ்வரி, வனிதா, விஜயா, அனிதா என்கிற கஸ்தூரி, ராஜேந்திரன், காமேஸ்வரராவ், முகமது அசாருதீன், பசுலுதீன், வினோபாஜி, கிரிதரன், ராஜாசுந்தர், நாகராஜ், பொன்ராஜ், வெங்கட்ராம் என்கிற அஜய் கண்ணண் ஆகிய 21 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவர்களை குற்றவாளிகள் என அறிவித்து தீர்ப்பளித்தார். இவர்களுக்கான தண்டனை விபரங்களை இன்று நீதிபதி அறிவிக்க உள்ளார்.
மேலும், கடந்த 31 ஆம் தேதி மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக உமா ஆனந் மீது கோவில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் மயிலாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி பொது இடத்தில் கூட்டம் கூடுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் உமா ஆனந் மீது வழக்கு பதிவு செய்து உள்ள நிலையில் இன்று நேரில் அழைத்து விசாரிக்க சம்மன் வழங்கி உள்ளது காவல்துறை.
மேலும் படிக்க | சவுக்கு சங்கர் கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்த தொல்.திருமாவளவன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ