ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு விசாரணை தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜராகி விளக்க வேண்டும் என்று மத்திய அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டில் புதிய ரிட் மனு ஒன்றை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அமர்வு முன்பாக அவருடைய வக்கீல் நேற்று தாக்கல் செய்தார். 


அதில், சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்ததன் அடிப்படையில் இதுபோன்ற சம்மன்களை அமலாக்கத்துறை அனுப்புவதற்கு எவ்வித அதிகார வரம்பும் கிடையாது. எனவே இந்த சம்மன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கூறி இருந்தார்.


ஆனால், தனது மனுவை திரும்பப்பெற்ற கார்த்தி சிதம்பரம், டெல்லி உயர் நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அமலாக்கத்துறை கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை விதித்து. மேலும், சிபிஐ விசாரணையில் இருக்கும் கார்த்தி சிதம்பரம் ஜாமினில் வெளிவரும் பட்சத்தில் வரும் 20-ம் தேதி வரை அவரை கைது செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டது டெல்லி உயர் நீதிமன்றம்.