Devanathan Arrested In Trichy: ரூ.525 கோடி அளவில் நிதி நிறுவன மோசடி வழக்கில் பாஜக கூட்டணியில் இருக்கும் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தேவநாதனை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் திருச்சியில் கைது செய்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனியார் தொலைக்காட்சி சேனலின் அதிபரான தேவநாதன், கடந்த 20 ஆண்டுகளாக தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிமிடெட் நிறுவனத்தின் தலைவராகவும் உள்ளார். இவர் கல்வி நிறுவனங்களையும் அவர் நடத்தி வருகிறார். மேலும் இந்த சிட் பண்ட் நிதி நிறுவனம் 100 ஆண்டுகளுக்கு மேலாக மயிலாப்பூரில் இயங்கி வருவதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது.


மேலும் படிக்க | 48 வயது ஆணுக்கு 2 இதயம்... அதுவும் ஒரே நேரத்தில் துடிக்கும் அதிசயம் - கோவை மருத்துவர்கள் சாதனை!


ரூ.525 கோடி மோசடியா?


இந்த நிதி நிறுவனத்தில் ரூ.525 கோடிக்கு அளவில் மோசடி செய்ததாக 140க்கும் மேற்பபட்டோர் அளித்த புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று அவரை கைது செய்தனர். குறிப்பாக, இந்த நிதி நிறுவனத்தில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் நிரந்தர வைப்புத்தொகையை செலுத்தி வருகின்றனர். இதில் முதலீடு செய்தால் 11 சதவீதம் வட்டி தருவதாக கூறியதை அடுத்து பலரும் இதில் முதலீடு செய்துள்ளனர். ஆனால், முதலீட்டாளர்களுக்கு கூறியபடி பணம் செலுத்தவில்லை. அதேபோல், தங்களின் முதலீட்டை தேர்தல் செலவுக்கு அவர் பயன்படுத்தியதாகவும் முதலீட்டாளர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். 150க்கும் மேற்பட்டோருக்கு அளிக்கப்பட்ட காசோலை, பணம் இல்லாமல் திரும்ப வந்துவிட்டதாகவும் புகார்கள் வந்தன. 


இந்த புகாரின் பேரில் திருச்சியில் வைத்து கைது செய்த நிலையில் அவரை போலீசார் சென்னைக்கு அழைத்துவந்து விசாரணை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தேவநாதன் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டார். இதில் அவர் 1 லட்சத்து 95 ஆயிரத்து 788 வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்தைதான் பெற்றார். இந்த தொகுதியில் 4 லட்சம் 27 ஆயிரத்து 677 வாக்குகளை பெற்று காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்றிருந்தார். 


சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்களிலேயே தேவநாதன்தான் அதிக சொத்து மதிப்புடையவராக இருந்தார். அவர் வேட்புமனுவில் தனது மகள்கள் பெயரில் ரூ. 7.29 கோடியும், தனது பெயரில் ரூ. 6.86 கோடியும், மனைவி பெயரில் 2.23 கோடியும் இருப்பதாக அதில் குறிப்பிட்டிருந்தார். மேலும், தனது மகள்கள் பேரில் தலா ரூ. 2 கோடி அளவுக்கு அசையா சொத்துகளும், மனைவி பெயரில் ரூ.5.80 கோடி அளவுக்கு அசையா சொத்துகளும், தனது பெயரில் ரூ. 8 கோடி அளவுக்கு அசையா சொத்துகளும் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். 


மேலும் படிக்க | அமைச்சரவைக் கூட்டத்தில் ரூ.44,125 கோடி மதிப்பில் 15 முதலீடுகளுக்கு ஒப்புதல்: தங்கம் தென்னரசு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ