திருவாரூர் மாவட்டம் திருக்கொள்ளிக்காடு பகுதியில் பஞ்சினும் மெலடியாள் உடனுறை அக்னிபுரீஸ்வரர் பொங்கு சனீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. திருநள்ளாறுக்கு அடுத்தபடியாக பிரசித்தி பெற்ற ஆலயமாக விளங்கும் இங்கு சனீஸ்வரன் பொங்கு சனியாக பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். ஆலயத்தின் குபேர மூலையில் கையில் ஏர் கலப்பையுடன் சனீஸ்வரன் தனி சன்னதியாக காட்சியளிக்கிறார். அவருக்கு நேர் எதிரே காலபைரவர் இருப்பது இந்த ஆலயத்தின் தனி சிறப்பாகும். நளச்சக்கரவர்த்தி திருநள்ளாறில் சனீஸ்வரன் வழிபட்டு சனி தோஷம் நீங்க பெற்றாலும், இந்த திருக்கொள்ளிக்காடு தளத்தில் வழிபட்ட பின்னர் தான் தனது நாட்டையும் அனைத்து செல்வங்களையும் இழந்த புகழையும் மீண்டும் பெற்றதாக வரலாறு.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இத்தகைய புகழ்பெற்ற ஆலயத்தில் இன்று சனிக்கிழமையையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள், பெண்கள், முதியவர்கள், பக்தர்கள் திருக்கொள்ளிக்காடு சனீஸ்வர பகவானை தரிசிக்க வந்திருந்தனர்.  பல்வேறு ஊர்களில் இருந்து பல மணி நேர பயணத்திற்கு பிறகு திருக்கொள்ளிக்காடு வந்தடைந்த பொதுமக்கள் தங்கள் கைகள் மற்றும் கால்களை சுத்தம் செய்வதற்காக கழிப்பறையை தேடி சென்றனர்.


மேலும் படிக்க | Weekly Horoscope (November 21-27): துலாம் முதல் மீனம் வரையிலான வார பலன்கள்!


ஆனால் கோயில் எதிரே உள்ள கழிப்பறை சிதிலமடைந்து இருந்தது. மேலும் கோவிலுக்கு அருகிலேயே தனியார் கழிவறை ஒன்று இருந்தது. ஆனால் அதுவும் பூட்டப்பட்டிருந்தது. இதனால் பல ஊர்களில் இருந்து பல மணி நேர பயணத்துக்கு பின் திருக்கொள்ளிக்காடு  சனீஸ்வர பகவானை தரிசிக்க வந்த பக்தர்கள் மிகுந்த அவதியடைந்தனர். குறிப்பாக பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், கழிவறை செல்ல முடியாமல் மிகுந்த அவதி அடைந்தனர். ஒரு சிலர் கோவிலில் பின்பக்கத்தில் திறந்த வெளியில் கழிவறை சென்றதை காண முடிந்தது. இது குறித்து கோவில் நிர்வாகத்திடம் கேட்டபோது முறையாக பதிலளிக்கவில்லை.


மேலும் சாலை மிக மோசமாக குண்டும் குழியுமாக, சேறும் சகதியுமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பக்தர்கள் தங்கும் கட்டிடத்தை அன்னதான கூடமாக மாற்றி உள்ளனர். இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் தங்க முடியாமல் அவதிக்கு உள்ளாவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்‌. இன்று உலக கழிவறை நாள் கொண்டாடப்படும் நிலையில் கழிவறை இல்லாமல் பக்தர்கள் அவதிப்பட்டது வேதனையை ஏற்படுத்தியது.


மேலும் படிக்க | டிசம்பரில் இரு முறை பெயர்ச்சி ஆகும் சுக்கிரனால் ‘4’ ராசிகளுக்கு சுக்கிர திசை! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ