மயிலாடுதுறை தருமபுர ஆதீனம் 27 ஆவது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் ஆபாச வீடியோ ஆடியோ உள்ளதாக கூறி மிரட்டல் விடுத்ததாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் போடப்பட்ட வழக்கில் தலைமறைவாக உள்ள இரண்டாவது நபராக குற்றம் சாட்டப்பட்ட தருமபுர ஆதீனத்தின் நேர்முக உதவியாளர் திருவையாறு செந்தில் 4 மாதங்களாக தேடப்பட்டு வந்த நிலையில் உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் இருப்பதாக மயிலாடுதுறை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து‌மயிலாடுதுறை சிறப்பு தனிப்படை போலீசார்  வாரணாசிக்கு சென்று செந்திலை கைது செய்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தொடர்பான ஆபாச ஆடியோ, வீடியோ இருப்பதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டிய புகாரில், மயிலாடுதுறை போலீஸார் 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்து பாஜகவின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம், ஆடுதுறை வினோத், திருவெண்காடு சம்பா கட்டளையைச் சேர்ந்த விக்னேஷ், செம்பனார்கோயில் தனியார் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, நெய்க்குப்பையைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ்,  ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


வழக்கில் தொடர்புடைய செய்யூரைச் சேர்ந்த  வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், தருமபுர ஆதீனகர்த்தரின் நேர்முக உதவியாளர் செந்தில், செம்பனார்கோவில் மத்திய ஒன்றிய செயலாளர் திருக்கடையூர் விஜயகுமார், திருச்சியைச் சேர்ந்த பிரபாகர் ஆகிய 4 பேர் கைது செய்யப்படாததால் போலீசார் குறறப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. 


ஆதீனத்தில் நேர்முக உதவியாளர் செந்தில் பணிநீக்கம் செய்யப்பட்டார். வழக்கில் எஞ்சிய குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருந்ததால் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. இதனால் ஜாமீன் பெறமுடியாமல் சிறையில் அடைக்கப்பட்ட 4 பேர் 90 நாட்கள் சிறையில் இருந்ததை தொடர்ந்து நிபந்தனை ஜாமீன் பெற்று விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று தருமபுர ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்தில் முதல்முறையாக முன்ஜாமீன் கேட்டு மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். 


மேலும் படிக்க | சென்னையில் தனியார் உணவகத்தில் மின்சாரம் பாய்ந்து நபர் உயிரிழப்பு


அரசு வழக்கறிஞர் ராமசேயோன் ஆஜராகி செந்திலை கைது செய்து நீண்ட விசாரணை செய்தால்தான் வழக்கு முடிவடையும் என்று அரசு தரப்பு வாதிட்டதை ஏற்று நீதிபதி முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார். 


இந்நிலையில் 4 மாதமாக செந்திலை போலீசார் தேடி வந்த நிலையில் ரகசிய தகவலின் பேரில் உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசிக்கு சென்ற  தனிப்படை போலீசார் தருமபுர ஆதீனத்தில் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்திலை கைது செய்துள்ளனர். 


முன்னதாக ஆதீனகர்த்தரின் நேர்முக உதவியாளர் செந்தில், செம்பனார்கோவில் மத்திய ஒன்றிய செயலாளர் திருக்கடையூர் விஜயகுமார் ஆகிய இருவர் எந்த தவறும் செய்யவில்லை தவறுதலாக குறிப்பிட்டதாக புகார் அளித்த ஆதீனத்தின் சகோதரர் விருத்தகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தனித்தனியாக அனுப்பிய கடிதம் வெளியாகியது.  செம்பனார்கோவில் மத்திய ஒன்றிய செயலாளர் திருக்கடையூர் விஜயகுமாரை மட்டும் வழக்கில் இருந்து விடுவிக்கும்படி கடிதம் வழங்கியதாகவும், விருத்தகிரி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | உஷார்…தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு கள்ளக்கடல் எச்சரிக்கை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ