உஷார்…தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு கள்ளக்கடல் எச்சரிக்கை!

தூத்துக்குடி இந்திய வானிலை மையம் கள்ளக் கடல் எச்சரிக்கை விடுத்திருப்பதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியதாழை முதல் வேம்பார் வரை உள்ள கடல் பகுதியில் கடல் அலைகள்  சீற்றத்துடன் காணப்படும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Yuvashree | Last Updated : Jun 10, 2024, 08:46 PM IST
  • கள்ளக்கடல் எச்சரிக்கை
  • தமிழகத்தின் 4 மாவட்டங்கள் உஷார்
  • எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
உஷார்…தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு கள்ளக்கடல் எச்சரிக்கை! title=

தூத்துக்குடி இந்திய வானிலை மையம் கள்ளக் கடல் எச்சரிக்கை விடுத்திருப்பதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியதாழை முதல் வேம்பார் வரை உள்ள கடல் பகுதியில் கடல் அலைகள்  சீற்றத்துடன் காணப்படும் என்பதால் பொதுமக்கள் யாரும் கடல் அருகே செல்ல வேண்டாம் மேலும் கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி எச்சரிக்கை

தூத்துக்குடி ராமநாதபுரம் திருநெல்வேலி கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் வரும் 14ஆம் தேதி வரை கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கள்ளக் கடலை எச்சரிக்கை விடுத்துள்ளது இதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி  விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது

மேலும் படிக்க | இந்த தேர்தலில் தமிழக மக்கள் முடிவெடுத்தது சரியானது - மதுரை ஆதினம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியதாழை முதல் வேம்பார் வரை உள்ள கடற்கரை கிராமங்களில் இன்று 10.6. 2024 மதியம் 12:30 மணி முதல் நாளை 11. 6. 2024 இரவு 11 மணி வரை கடலில் 2. 4 மீட்டர் முதல் 2.7 மீட்டர் உயரம் வரை பேரலைகள் எழும்பக் கூடும் எனவும் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வரை காற்று வீசு கூடும் எனவும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது 

எனவே கடற்கரையை ஒட்டி உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் கடற்கரையோர கிராமங்கள் கடலின் அருகில் செல்லவோ கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொள்ளவோ கடலில் இறங்கி குளிக்கவே கூடாது என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது மேலும் 10. 6. 2024 முதல் 14. 6. 2024 வரை மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வரை காற்று வீசகூடும்  என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 

மேலும் கடலோர கிராமங்களை கண்காணித்து எவ்வித அசம்பாவிதமும் ஏற்படா வண்ணம் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது.

மேலும் படிக்க | சென்னையில் தனியார் உணவகத்தில் மின்சாரம் பாய்ந்து நபர் உயிரிழப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News