தருமபுரி நேதாஜி பை-பாஸ் சாலையில் உள்ள பிரபலமான பிக்பாஸ் என்ற ஜவுளி கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் பொங்கல் பண்டிகையொட்டி தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் துணிகளை வாங்கி சென்றனர். இந்த கடையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பகுதியை சேர்ந்த ரியாஷ் அகமது (39) என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 16-ந் தேதி பொங்கல் பண்டிகையொட்டி ஜவுளி கடையில் வியாபாரத்தால் வசூலான  ரூ.14 லட்சத்து 62 ஆயிரத்து 500 பணத்தை பணப்பெட்டியில் வைத்துவிட்டு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் மேலாளர் ரியாஷ்அகமது 17 ந் தேதி கடையை வழக்கம் போல் கடையை திறந்து பார்த்த போது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் உள்ளே சென்று பார்த்தபோது பணப்பெட்டியில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தருமபுரி நகர காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அங்குள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். 


இதையடுத்து, பென்னாகரம் சாலையில் இன்று காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்த போது அந்த வழியாக வந்த 2 இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் அழைத்து விசாரணை மேற்கொண்டதில்  அவர்கள் முன்னுக்கு பின் முரனாக பதில் கொடுத்துள்ளனர். 


மேலும் படிக்க | திராவிட மாடல் இந்துக்களுக்கு எதிரான மாடல், மீண்டும் சனதான தர்மம் -வானதி சீனிவாசன்


மேலும் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் கடந்த 16 ந் தேதி தருமபுரி நகரில் உள்ள துணி கடையில் பணத்தை திருடி சென்றவர்கள் என சிசிடிவி காட்சிகளை கொண்டு உறுதிபடுத்தினர். மேலும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் பிடமனேரி பகுதியை சேர்ந்த குமார் என்பவரின் மகன் பாரத்குமார் (20) மற்றும் கடகத்தூர் பகுதியை சேர்ந்த தேவன் என்பவரின் மகன் மோகன் குமார் (21) என்பதும் தெரியவந்தது. இதில் மோகன் குமார் தருமபுரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நரசிங் 2 ம் ஆண்டு படித்து வருகிறார்.
 
இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சினிமா பாணியில் தலையில் ஒழிரும் லைட் கட்டிக்கொண்டு முகம் தெரியாமல் இருக்க பயன்படுத்தி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 13 இலட்சத்து 93 ஆயிரத்து 790 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யபட்டது. மேலும் இவர்களிடமிருந்து 1 இரண்டு சக்கர வாகனம் பறிமுதல் செய்யபட்டது.


மேலும் படிக்க | 'அயோத்திக்கு போகாமல்... நிர்மலா சீதாராமனின் நோக்கம் இதுதான்' - புட்டு புட்டு வைக்கும் சேகர் பாபு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ