தமிழ்நாடு: பெங்களூரு சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பாலத்தில் நிகழ்ந்த பயங்கர விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மருத்துவமனையில் சிகிச்சைக்காக பலர் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடலாம். தருமபுரியில் (Dharmapuri) இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சேலம் (Selam) நோக்கி ஒரு கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. தருமபுரி மாவட்டம் தொப்பூர் (Thoppur Highway) கணவாய் பாலத்தில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி ஒரு கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது.


 



 


ALSO READ | சாலை விபத்துக்களால் இந்தியாவில் 1.54 லட்சம் பேர் கொல்லப்பட்டனர்: அறிக்கை


அதே சமயம் சாலையின் வலது பக்கத்தில் வந்து கொண்டிருந்த வாகனங்கள், கார்களை லாரியின் கண்டெய்னர் பகுதி மோதி நசுக்கியது. இந்த பயங்கர விபத்தில் வாகனங்கள் உருக்குலைந்தன. கார்களில் இருந்தவர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த பயங்கர விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.


ALSO READ | கர்நாடகா சாலை விபத்தில் தமிழக பக்தர்கள் 10 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR