தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதிக்குட்பட்ட தொப்பூர் முதல் மேட்டூர் வழியாக செல்லும் பவானி இருவழிச் சாலை போக்குவரத்துக்கு பயன்படுத்தமுடியாமல் சாலைகளின் நடுவே பெரிய பள்ளங்கள் உள்ளதால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இந்தசாலையை சீரமைக்க வேண்டும் என கடந்த அதிமுக ஆட்சியிலிருந்து பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் சாலை சீரமைக்கும் பணி தொடங்காமல் இருந்துவந்தது, இந்நிலையில் தருமபுரிநாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் முயற்சியில் தற்போது சாலை சீரமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | AIADMK: அதிமுக கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்தினால் வழக்கு - எடப்பாடி அணி



நேற்று மேச்சேரி அருகே சாலை விரிவு படுத்தும் பணியை ஆய்வு செய்ய எம்பி செந்தில்குமார் நேரில் சென்றால். ஆனால் சாலை பணி முழுமைபெறாமல் ஆங்காங்கே பாதியில் நிறுத்தப்பட்டு, பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வந்தது. பணியை ஒப்பந்ததாரை அழைத்துள்ளர், அவர் அங்கு வராததால் ஆத்திரமடைந்த செந்தில்குமார் நெடுஞ்சாலை துறை அதிகாரி மற்றும் சூப்பர்வைரஸ்சர் ஆகியோரை லெப்ட் ரைட் வாங்கி திட்டி தீர்த்தார், தற்போது இந்த வீடியோ சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.


சமீபத்தில் விஜய்யின் வீட்டு முன் நின்று அழுது கொண்டிருந்த குழந்தையின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.  அந்த வீடியோவை பகிர்ந்த எம்பி செந்தில்குமார், "நடிகர் விஜய் அவர்கள் இந்த பாசமிகு காஞ்சிபுரம் சார்ந்த ரசிகையின் ஆசையை நிறைவேற்றுவார் என நம்பிக்கை உள்ளது.  
ரசிகர்கள் திரைப்படங்களின் நடிகர்களை ஓர் முறையாவது சந்தித்து புகை படம் எடுக்க வேண்டும் என ஆசை படுவது இயல்பு தான்" என்று பதிவு செய்து இருந்தார்.  இதற்கு ஆதரவும் எதிப்பும் இருந்தது.


மேலும் படிக்க | வேங்கைவயல் விவகாரம்: இதுவரை என்ன நடவடிக்கை... முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ