Director Manikandan House Theft Case: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி எழில் நகரைச் சேர்ந்தவர் இயக்குநர் மணிகண்டன். காக்கா முட்டை, கடைசி விவசாயி உள்ளிட்ட தேசிய விருது பெற்ற தமிழ் திரைப்படங்களை இயக்கிய மணிகண்டன் தற்போது தனது அடுத்த திரைப்படத்தின் வேலைக்காக குடும்பத்துடன் சென்னையில் கடந்த 2 மாதங்களாக வசித்து வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உசிலம்பட்டியில் உள்ள இயக்குநர் மணிகண்டன் வீட்டில் உள்ள நாய்க்கு மணிகண்டனின் ஓட்டுநர்களான ஜெயக்குமார், நரேஷ்குமார் என்ற இருவரும் தினசரி வந்து உணவு வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தாக கூறப்படுகிறது. அப்போது, கடந்த பிப். 7ஆம் தேதி நாய்க்கு உணவை வைத்துவிட்டு சென்ற பின் பிப். 8ஆம் தேதி வழக்கம் போல மாலை 4 மணியளவில் நாய்க்கு உணவு வைக்க வந்த நரேஷ்குமார், வீட்டின் கதவுகள் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து போலிசாருக்கு தகவல் அளித்துள்ளார். 


தகவல் அறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலிசார் நடத்திய சோதனையில் வீட்டின் பீரோவில் இருந்த கடைசி விவசாயி திரைப்படத்திற்காக மத்திய அரசு வழங்கிய இரு தேசிய விருதுக்கான வெள்ளி பதக்கங்கள், 1 லட்சம் ரொக்கம் மற்றும் 5 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப் பட்டிருந்தது முதற்கட்டமாக தெரிய வந்தது.


மேலும் படிக்க | அதிர்ச்சி..! ‘கடைசி விவசாயி’ பட நடிகை கொலை! நடந்தது என்ன?


இந்த சம்பவம் கடந்த வாரம் நிகழ்ந்த நிலையில், பிரபல இயக்குனர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, டிஎஸ்பி நல்லு தலைமையிலான போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.


இந்நிலையில் இன்று மணிகண்டன் வீட்டில் பாலித்தீன் பையில் ஒன்று கடிதத்துடன் தொங்கவிடப்பட்டு சென்றுள்ளது. "அய்யா எங்களை மன்னித்து விடுங்கள். உங்கள் உழைப்பு உங்களுக்கு..." என எழுதப்பட்ட மன்னிப்பு கடிதத்துடன் தேசிய விருதுக்கான வெள்ளி பதக்கங்களை மட்டும் கொள்ளை கும்பல் தொங்க விட்டுச் சென்றுள்ளனர்தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் தேசிய விருதுக்கான பதக்கங்களை கைப்பற்றி தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக, 


மணிகண்டன் 2015ஆம் ஆண்டில் காக்கா முட்டை திரைப்படத்தை வெளியிட்டார். இதன் அவரின் முதல் முழு நீள திரைப்படமாகும். இந்த படத்தை எழுதி இயக்கியது மட்டுமின்றி ஒளிப்பதிவாளராகவும் செயல்பட்டார். தொடர்ந்து, இவரின் படங்களான குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி ஆகியவை நல்ல வரவேற்பை பெற்றன. 


இதில் குற்றமே தண்டனை, கடைசி விவசாயி படத்திற்கு கதை, திரைக்கதை, இயக்கம் மட்டுமின்றி ஒளிப்பதிவாளராகவும் இருந்தார். ஆண்டவன் கட்டளை திரைப்படத்தை மணிகண்டன் இயக்க மட்டுமே செய்தார். முன்னதாக இவர் திரைப்பட உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். அதன்பின், 2010ஆம் ஆண்டில் விஜய் சேதுபதியை வைத்து விண்ட் என்ற குறும்படத்தை எடுத்ததன் மூலம் பரவலான கவனத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | தமிழ்நாட்டில் சாலை விபத்துகளை குறைக்க அரசு புதிய நடவடிக்கை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ