தமிழ்ச்சினிமாவின் இயக்குநர்களைக் கொண்டாடும் வரிசையில் எப்போதும் செல்வராகவனுக்கு தனியிடம் உண்டு. அவரது படங்களுக்கான ரசிகர் பட்டாளமும் உண்டு. சமீபத்தில் இயக்குநராக இருந்த செல்வராகவன் நடிப்பிலும் களம் இறங்கினார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான சாணிக் காயிதம் திரைப்படத்தில் சங்கய்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார் செல்வராகவன். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2010ஆம் ஆண்டு கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமாசென் உள்ளிட்டோரை வைத்து செல்வராகவன் இயக்கி வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன். சோழர்கள், பாண்டியர்கள் என கதைக்களத்தை எடுத்துக்கொண்டு தனது மேஜிக்கை செல்வராகவன் அப்படத்தில் நிகழ்த்தியிருப்பார். 


மேலும் படிக்க | தொடங்கியது ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் - இலக்கு என்ன ?


இப்படமும் வெளியானபோது போதிய வரவேற்பைப் பெறாமல் பிற்காலத்தில் கல்ட் க்ளாசிக்காக கொண்டாடப்பட்டது. மேலும் புதுப்பேட்டை போலவே இப்படத்தின் முடிவிலும் சோழன் பயணம் தொடரும் என இரண்டாம் பாகத்துக்கான லீட் வைக்கப்பட்டிருந்ததால் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்ற ஏக்கம் ரசிகர்களிடம் நீண்ட வருடங்களாக இருந்தது.


அதனைப் போக்கும் வகையில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பையும் செல்வா வெளியிட்டார். அதில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அதேசமயம், புதுப்பேட்டை 2 குறித்த அப்டேட்டையும் அவர்கள் கேட்டுவந்தனர். 


இந்நிலையில், சென்னையில் இன்று நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் இயக்குனர் செல்வராகவன் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவரிடம், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய இரண்டு திரைப்படங்களில் எந்தப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, புதுப்பேட்டை இரண்டாம் பாகம்தான் வரும் என்றார். அதேபோல், ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகமும் விரைவில் வெளிவரும் என்றும் செல்வராகவன் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய செல்வராகவன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்துப் பேசி ஆச்சரியப்படுத்தினார். விழாவில் அவர் பேசியதாவது, 


’எனக்கு சிறுவயது முதலே மு.க.ஸ்டாலின் என்றால் மிகவும் பிடிக்கும். இப்படிப்பட்ட ஒரு முதல்வர் தமிழகத்திற்கு வர மாட்டாரா என மக்கள் ஏங்கிக் கொண்டு இருந்தார்கள். மக்கள் முதல்வர் என்றால் அது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். நமது தமிழ்நாடு உலகிலேயே ஒரு சிறந்த வளர்ந்த மாநிலமாக வளர வேண்டுமென்றால் அது நம் முதலமைச்சரால்தான் முடியும்.’ என்று தெரிவித்தார். 


மேலும் படிக்க | 8 மாதங்களில் கட்டடம்- 4 ஆண்டுகளாக ஒற்றை செங்கல்: வைரலாகும் சு.வெங்கடேசனின் பதிவு


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR