முழு முடக்கம் அமலாகியுள்ள சென்னை 4 மாவட்டங்களில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கும் பணி தொடக்கம் 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முழு ஊரடங்கு அமலில் உள்ள சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன் கொரோனா குறித்த 4 பக்க விளக்கக் குறிப்பும் வழங்குகின்றனர்.  


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா பரவுவதை தடுக்க தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் பதிவான மொத்த பாதிப்புகளில் பாதி சென்னையிலும் அதை சுற்றி உள்ள பகுதிகளிலும் பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனாவால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவதாக பதிவாகியுள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகமாக பரவி உள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் மேலும் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கபட்டுள்ளது. 


READ | ரயில்வே துறை பணிக்கு காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஒரு மோசமான செய்தி...


முழு ஊரடங்கு அறிவிக்கபட்டுள்ள பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ.1000 வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். இதனை செயல்படுத்தும் விதமாக இன்று முதல் 26-ஆம் தேதி வரை 5 நாட்கள் ரேஷன் கடைகள் செயல்படாது என்றும் ஜூன் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை பெறாதவர்கள் 27 ஆம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து, சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ரேஷன் கடை ஊழியர்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பயனாளிகளுக்கு வீடு, வீடாக சென்று அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன் கொரோனா வைரஸ் குறித்த 4 பக்க விளக்கக் குறிப்பும் வழங்குகின்றனர்.