மதுரை திருமங்கலம் அருகே நேசநெறி கிராமத்தை சேர்ந்த சகோதர்கள் குருசாமி ஆறுமுகம் ஆகிய இருவர் நிலம் வாங்க வந்துள்ளனர் கூடவே இட புரோக்கர்கள் திருச்சி அப்துல் ரகுமான் உடுமலைப்பேட்டைசாமிநாதன் என்பவர்களும் காரில் உடன் வந்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதுரை - சிவகங்கை சாலையில் வந்த போது இடபுரோக்கர் அப்துல் ரகுமான் சித்தலூர் கிராமத்தில் கோவில் அருகே இரிடியம் இருப்பதாக கூறி அழைத்து ஆறுமுகத்தையும் குருசாமியுடன் திட்டமிட்டு சித்தலூருக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு இரண்டு இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த மூன்று நபர்கள் வால் மற்றும் கத்தியை காண்பித்து மேற்படி ஆறுமுகம், குருசாமி வைத்திருந்த ரூபாய் 23 லட்சத்து 50 ஆயிரத்தை பறித்து சென்றனர் பணத்தை பறிகொடுத்த, ஆறுமுகம் குருசாமியும் பூவந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் 3 தனிபடை அமைத்து சிவகங்கை போலீசார் 9 மணி நேரத்தில் 9 குற்றவாளிகளை கைது செய்தனர். 


ALSO READ |  கொலையா? தற்கொலையா? தூக்கில் தொங்கிய நிலையில் சிறுவனும், சிறுமியும் சடலமாக மீட்பு


இந்த விசாரனையில் சகோதரர் குருசாமி நண்பர்களுடன் சேர்ந்து நாடகம் ஆடியது அம்பலமானது மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே நேசனேரியை சேர்ந்த ஆறுமுகம் (36) என்பவரிடம் அவரின் உடன்பிறந்த சகோதரரான குருசாமி (42) நண்பர்களுடன் சேர்ந்து நயவஞ்சகமாக பேசி இரிடியம் வாங்கி விற்றால் அதிக லாபம் பெறலாம் என்று மோசடி செய்யும் நோக்கில், நண்பரான முனியாண்டி இரிடியம் கொண்டு வருவதாக கூறி அழைத்து வந்து எதிரிகளுடன் சேர்ந்து நேற்று அச்சுறுத்தி, கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.23,50,000 பணத்தை பறித்துச் சென்றனர். 


மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார் உத்தரவின் பேரில் DSP பால்பாண்டி தலைமையில் தனி படை அமைத்து 9 மணி நேரத்தில் துப்பு கிடைத்து சம்பவத்தில் திட்டமிட்டு ஈடுபட்ட நேசனேரி குருசாமி ( 42) வேலாங்குளம் பூச்சி (எ) இருளப்பன் (45), புதுக்குளம் இருளப்பன் (25), மாத்தூர் அஜீத்குமார் வேலூர் பாண்டிதுரை (38), திருச்சி அப்துல்ரஹ்மான் (60), மாத்தூர் ரமேஷ் (26), திருப்பூர் சாமிநாதன் (50), சருகனி. பாண்டியராஜன் (42), உள்ளிட்டவர்களை சிவகங்கை தாலுகா போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து கொள்ளையடித்துச் சென்ற ரூ.23,50,000 பணம் மற்றும் கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்திய டவேரா கார், 2 இரு சக்கர பல்சர் வாகனங்கள் மற்றும் வாள் ஆகியவற்றை கைப்பற்றினர் இவ்வழக்கில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறைக்கு அனுப்புகின்றனர்.


ALSO READ | சேலம்: வீட்டில் சிலிண்டர் வெடித்து விபத்து- 1 பலி, 3 வீடுகள் முற்றிலும் சேதம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR