சேலம் மாநகர் கருங்கல்பட்டி பாண்டு ரங்க நாதர் விட்டல் தெருவில் வசித்து வருபவர் கணேசன். இவர் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். அதே போன்று கோபி என்பவர் எலக்ட்ரிஷன் ஆக பணியாற்றி வருகிறார். இருவரது வீடுகளும் அருகருகே உள்ள நிலையில் இன்று காலை சுமார் 6.30 மணி அளவில் இவர்கள் வீட்டில் சிலிண்டர் பயங்கர சத்ததுடன் வெடித்து.
இந்த விபத்தில் (Salem Cylinder Blast) இரண்டு மாடி வீடுகள் இடிந்து விழுந்தன. அருகில் இருந்த சில வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. இதனிடையே, வீடுகள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் பலர் சிக்கிக்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் அப்பகுதி பொதுமக்கள் உதவியோடு இடிபாடுகளில் சிக்கியிருந்த பத்துக்கும் மேற்பட்டவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதற்கிடையில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாநகராட்சி ஆணையர் கிருஸ்துராஜ், மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா உள்ளிட்டோரும் மீட்பு பணிகளை பார்வையிட்டு துரிதப்படுத்தி வருகின்றனர்.
(Image Courtesy:JAFFER MOHAIDEEN / Zee Digital)
தற்போது இந்த இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த ராஜலட்சுமி என்ற 70 வயது மூதாட்டி உள்ளிட்ட 4 பெண்கள், பூஜாஸ்ரீ என்ற சிறுமி, சுதர்சன் என்ற சிறுவன் உள்பட 13 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் ராஜலட்சுமி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.
இந்நிலையில் இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்பதால் இடிந்து விழுந்த வீடுகளை, கிரேன் மூலம் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு காணப்படுகிறது.
Tamil Nadu: Four houses collapsed in Salem district's Karungalpatti this morning due to heavy rain. 13 people rescued so far & sent to Salem govt hospital; 4 people still feared trapped under the debris. Fire dept officials are clearing the debris & rescue operation is underway. pic.twitter.com/cqg52eOsY4
— ANI (@ANI) November 23, 2021
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR