வலியுறுத்திய தேமுதிக... நிறைவேற்றிய திமுக: விஜயகாந்த் பாராட்டு
தேமுதிகவின் மூன்று முக்கிய வலியுறுத்தல்களை திமுக அரசு செயல்படுத்தி இருப்பதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் ஓய்வெடுத்து வந்தாலும் தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன என்பது குறித்தும், மக்கள் பிரச்சினைகள் குறித்தும் தொடர்ந்து தனது கருத்துகளை அறிக்கை வாயிலாகத் தெரிவித்து வருகிறார். இதற்கான வரவேற்பும் இருந்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் தேமுதிக சார்பில் முன்வைக்கப்பட்ட மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக அதுகுறித்த செயல்பாட்டு வடிவத்தைத் தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாராட்டி, வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், ''உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பெண் கவுன்சிலர்களின் கணவன்மார்கள் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டு, பெண் கவுன்சிலர்களுக்கான அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டுமென சமீபத்தில் தேமுதிக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மேலும் படிக்க | வாட்ஸ் அப்பில் இனி நம்பரை சேவ் செய்யாமலேயே மெசேஜ் அனுப்பலாம் - புதிய அப்டேட்!
ஆர்ப்பாட்டத்தின் எதிரொலியாக சென்னையில் நடைபெற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சியினர் வைக்கும் கோரிக்கைகளை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என எடுத்துரைத்து, அவர்களுக்கு அறிவுரை வழங்கியதை தேமுதிக வரவேற்கிறது.
அதேபோல் தேமுதிக நடத்திய ஆர்ப்பாட்டத்தில், பொருளாதார மந்தநிலையில் சிக்கித் தவிக்கும் இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க, இதுவே சரியான தருணம் என்பதால் மத்திய மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து கச்சத்தீவை மீட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டம் முடிந்த மறுநாளே, கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுப்பதே தமிழக அரசின் முதன்மையான குறிக்கோள் என மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவையில் அறிவித்ததை தேமுதிக மனமுவந்து வரவேற்கிறது.
விருதுநகர் இளம்பெண் பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, எனது ஆணைக்கிணங்க, விருதுநகரில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் எதிரொலியாக குற்றவாளிகளில் நான்கு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதை தேமுதிக வரவேற்கிறது'' என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | சென்னையில் 30 நிமிட பயணம் இனி 4 நிமிடத்தில்..! தமிழக அரசின் சூப்பர் பிளான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G