வாட்ஸ் அப்பில் இனி நம்பரை சேவ் செய்யாமலேயே மெசேஜ் அனுப்பலாம் - புதிய அப்டேட்!

வாட்ஸ் அப்பில் இனி நம்பரை சேவ் செய்யாமலேயே மெசேஜ் அனுப்பலாம்   

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Apr 14, 2022, 08:34 PM IST
  • உற்சாகதான புது அப்டேட்டுடன் வரும் வாட்ஸ் அப்
  • புது நம்பரை இனி சேவ் செய்யாமலேயே மெசேஜ் செய்யலாம்
  • மற்றொரு ‘சஸ்பென்சும்’ வைத்து வரும் வாட்ஸ்அப் அப்டேட்.!
வாட்ஸ் அப்பில் இனி நம்பரை சேவ் செய்யாமலேயே மெசேஜ் அனுப்பலாம் - புதிய அப்டேட்! title=

வாட்ஸ்அப் நிறுவனம் வாரம் தோறும் புது அப்டேட்களை வெளியிட்டபடியே இருக்கிறது. வாடிக்கையாளர்களின் பிரச்சனை காது கொடுத்துக் கேட்கும் இந்த நிறுவனம், சிறுசிறு சிக்கல்களை சரிசெய்யும் வண்ணம் தொடர்ந்து அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி, புதிதாக யாருக்காவது நாம் மெசேஜ் அனுப்ப வேண்டுமென்றால் என்ன செய்வோம்.?. அந்த நபரின் செல்போன் எண்ணை நமது செல்போனில் பதிவு செய்துகொண்ட பிறகே வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி அனுப்ப முடியும், சேட் செய்ய முடியும். இது பெரும் தலைவலியாக இருப்பதாக பயனாளர்கள் தொடர்ந்து புலம்பிக் கொண்டே வந்தனர். தற்போது அதற்கு முடிவுகாலம் வந்துவிட்டது.

மேலும் படிக்க | வாட்ஸ் ஆப்க்கு வரும் மிரட்டல் அப்டேட்! - உற்சாகத்தில் பயனர்கள்!

பயனாளர்கள் அசரும் வகையில் புதிய அப்டேட் ஒன்றை வாட்ஸ் அப் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இனி புதிதாக யாருக்காவது மெசேஜ் செய்ய வேண்டுமென்றால், அவரின் எண்ணை சேவ் செய்யாமலேயே மெசேஜ் அனுப்ப முடியும். ஒருவேளை அந்த நபருக்கு கால் செய்ய விரும்பினால் அது உங்களை டயலர் பயன்பாட்டிற்கு கொண்டு செல்லும். கால் ஹிஸ்டரியிலும், அந்த எண்ணை சேவ் செய்வதற்கான ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. எனவே இதை பயன்படுத்தி புதிய நம்பரை சேவ் செய்யாமலேயே இனி மெசேஜ், சேட் செய்ய முடியும். ஒருவேளை, அந்த புதிய எண் வாட்ஸ்அப்பில் இல்லை என்றால், மெசேஜிங் செயலி அதில் தோன்றும். அதைப் பயன்படுத்தி கொள்ளலாம். ஒருவேளை அந்த நம்பரை சேமிக்க விரும்பினால் சேமித்தும் கொள்ளலாம். இந்த புதிய நடைமுறை எப்போது நடைமுறைக்கு வரும் என்று வாட்ஸ் அப் பயனாளர்கள் ஆர்வமுடன் காத்திருகின்றனர்.!

மேலும் படிக்க | நம்பரை சேமிக்காமல் வாட்ஸ்அப்பில் மெசேஜ் செய்வது எப்படி?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News