ஏழை மாணவர்களின் மருத்துவ படிப்பில் அசத்தும் திமுக vs அதிமுக
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய அதிமுக. அவர்களின் இந்தக் கல்வியாண்டு கட்டணத்தை திமுக ஏற்கும் என ஸ்டாலின் அறிவிப்பு.
சென்னை: நீட் தேர்வு காரணமாக ஒவ்வொரு வருடமும் மருத்துவ கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துக் கொண்டே வந்தது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை பல தரப்பில் இருந்து வைக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு நீட் தேர்வு ரத்து என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மேலும் மருத்துவ கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு போதுமான இடங்கள் கிடைப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன.
தமிழக அரசுக்கு பாராட்டு:
இதனையடுத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி அதிமுக அரசு (AIADMK) அரசாணையை வெளியிட்டது. அதுமட்டுமில்லாமல் இந்த ஆண்டு முதலே அமல்படுத்தியது. இதனால் பல ஏழை மாணவர்களின் டாக்டர் கனவு நிறைவேறியது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை அனைத்து தரப்பினரும் பாராட்டினார்கள்.
கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலை:
அரசு பள்ளிகளில் படித்த ஏழை மாணவர்களுக்கு தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்தும் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் பலர் வெளியேறும் நிலை ஏற்பட்டது. இதனால் ஏழை மாணவர்களின் கல்வி கட்டணத்தை தமிழக அரசு (TN Govt) ஏற்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
ALSO READ | தமிழ அரசு அதிரடி!! மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என அரசாணை வெளியீடு
பாமக தலைவர் ராமதாஸ் அவர்களும் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கல்வி கட்டணத்தை தமிழக அரசே ஏற்க வேண்டும் எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டணம் செலுத்த நிர்பந்திக்க கூடாது:
அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களை உடனே கட்டணம் செலுத்த நிர்பந்திக்க கூடாது என தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மருத்துவக் கல்வி இயக்ககம் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியது.
மாணவர்களின் கல்விக்கட்டணத்தை திமுக ஏற்கும்:
இந்தநிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், "மாணவர்களின் கல்விக்கட்டணத்தை திமுக (DMK) ஏற்கும்" என அறிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ள அரசுப்பள்ளி மாணவர்கள் கட்டணம் கண்டு பரிதவிக்கிறார்கள். அவர்களின் மருத்துவக் கனவு அணையாது!
ALSO READ | அரசு மாணவர்களின் மருத்துவ கல்விக்கட்டணத்தை திமுக ஏற்கும் - MKS
இந்தக் கல்வியாண்டில் தனியார் கல்லூரிகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை மாணவர் நலன் காக்கும் திமுக ஏற்கும்" எனப் பதிவிட்டுள்ளார்.
திமுகவின் இந்த அறிவிப்பை பலர் பாராட்டி வருகின்றனர்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR