சென்னை: மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதால், 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு அளித்து தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாவிற்கு இன்றுவரை தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு அளிக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாமதம் செய்வதால், அரசு மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பெரும் குழப்பத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனால் மாணவர்களின் நலனைக்கருதி தமிழாக் அரசு 7.5% உள் ஒதுக்கீட்டை அமல்படுத்த இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த ஆணையை சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.
ALSO READ | 7.5% உள் ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் தராத ஆளுநரின் செயல் அதிகார எல்லை மீறல்: MKS
ALSO READ | 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தருவதாக ஆளுநர் உறுதி: அமைச்சர் ஜெயகுமார்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR