தேர்தலில் களமிறங்கும் திருநங்கைகள்: திராவிட கட்சிகளின் சமூக நீதிக்கு மற்றொரு சான்று
சமூகநீதிக்கு பேர் போன தமிழ்நாட்டில் திருநங்கைகள் மக்கள் பிரதிநிதிகளாக சபைக்கு சென்றால் அது அவர்களுக்கு அங்கீகாரத்தையும் உரிய மரியாதையும் பெற்றுதரும்.
தமிழ்நாட்டில் நகர்புற தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு பணிகள் துரித வேகத்தில் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு கட்சியும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர்களை தேர்வு செய்வது என இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர்.
தற்போது இருக்கும் இடஒதுக்கீட்டின்படி சென்னை மற்றும் தாம்பரம் மேயர் பொறுப்புகள் பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர கடலூர், திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட 9 மாநகராட்சியின் மேயர் பொறுப்பு பெண்களுக்கும் ஆவடி மேயர் பொறுப்பு பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் திருநங்கைகளுக்கென தேர்தலில் இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுவதில்லை.
இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய கட்சிகளான அதிமுக (AIADMK) மற்றும் திமுக இருவரும் திருநங்கைகளை தங்களது வேட்பாளர்களாக அறிவித்துள்ளனர். இது ஒரு சிறந்த முன்னுதாரனமாக பார்க்கப்படுகிறது.
ALSO READ | நகர்புற உள்ளாட்சித் தேர்தல் - வெற்றி வாய்ப்பு யாருக்கு? - அலசல்
சென்னை மாநகராட்சியின் 112ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்புக்கு ஜெயதேவி என்ற திருநங்கையை அதிமுக களமிறக்குகிறது. நீண்ட காலமாக கட்சி உறுப்பினராக இருக்கும் ஜெயதேவி தற்போது கட்சியின் மாவட்ட மகளிர் அணி துணை செயலாளராக உள்ளார்.
இதேபோல திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) சார்பில் வேலூர் மாநகராட்சியின் 37 ஆவது வார்டில் திருநங்கை கங்கா போட்டியிடுகிறார்.
சமூகநீதிக்கு பேர் போன தமிழ்நாட்டில் திருநங்கைகள் மக்கள் பிரதிநிதிகளாக சபைக்கு சென்றால் அது அவர்களுக்கு அங்கீகாரத்தையும் உரிய மரியாதையும் பெற்றுதரும். மக்களின் முடிவுக்காக காத்திருக்கும் திருநங்கைகள் கங்கா மற்றும் ஜெயதேவி ஆகியோர் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.
ALSO READ | விஜய் மக்கள் இயக்கத்துக்கு ஆட்டோ சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுப்பு!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR