விஜய் மக்கள் இயக்கத்துக்கு ஆட்டோ சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுப்பு!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விஜய் மக்கள் இயக்கத்துக்கு ஆட்டோ சின்னத்தை வழங்க மாநில தேர்தல் ஆணையம் நிராகரிப்பு செய்துள்ளது.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 29, 2022, 12:37 PM IST
  • விஜய் மக்கள் இயக்கத்தினை சார்ந்தவர்கள் பொதுவாக ஆட்டோ சின்னத்தினை வழங்க கோரிக்கை விடுத்திருந்தனர்.
  • மாநில தேர்தல் ஆணையம் அவர்களுக்கு ஆட்டோ சின்னம் வழங்க முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளது.
விஜய் மக்கள் இயக்கத்துக்கு ஆட்டோ சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுப்பு!  title=

தமிழகத்தில் பிப்ரவரி-19ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது.  இதற்கென பல கட்சிகளும் தங்களை தயார்படுத்திக்கொண்டு வருகிறது.  இதில் விஜய் மக்கள் இயக்கத்தினை சார்ந்தவர்கள் தங்களுக்கென்று பொதுவாக ஆட்டோ சின்னத்தினை வழங்க கோரிக்கை விடுத்திருந்தனர்.  ஆனால் இவர்களது கோரிக்கையை ஏற்க மறுத்த மாநில தேர்தல் ஆணையம் (Election Commission) அவர்களுக்கு ஆட்டோ சின்னம் வழங்க முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளது. 

auto

ALSO READ | நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக - பா.ஜ.க கூட்டணி தொடருமா?

ஏனெனில் இந்திய தேர்தல் ஆணையத்தில் முறைப்படி கட்சியை பதிவு செய்திருந்தால் மட்டுமே அந்த கட்சிக்கென்று சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும், விஜய் மக்கள் இயக்கம் (Vijay makkal Iyakkam)அவ்வாறு பதிவு செய்யாத காரணத்தினால் அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இருக்கிறது.  சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் சுமார் 129 இடங்களில் வெற்றி வாகை சூடினர்.  அதனைத்தொடர்ந்து தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெற தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் இவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இருப்பது சற்று சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

சென்னையை அடுத்த பனையூரில் விஜய் மக்கள் இயக்கத்தினர் தேர்தல் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வந்தனர்.  அதில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறுகையில், நடிகர் விஜய் பொது சின்னமான ஆட்டோ சின்னத்தை விஜய் மக்கள் இயக்கத்திற்கு வழங்குமாறு மாநில ஆணையத்துக்கு கடிதம் ஒன்றை வழங்கியுள்ளார் என்று கூறினார்.  இருப்பினும் இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யாத காரணத்தினால் சின்னத்தினை வழங்க முடியாது மாநில தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். 

இதனால் விஜய் மக்கள் இயக்கத்தினர் வெவ்வேறு சின்னங்களை பயன்படுத்தியே தேர்தலில் போட்டியிடும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.  மேலும் இவர்கள் போராடி உயர்நீதிமன்றம் வரை சென்று ஆட்டோ சின்னத்தை பெறுவார்களா? அல்லது தேர்தல் ஆணையம் வழங்கும் ஏதோ ஒரு சின்னத்தை வைத்து தேர்தலில் போட்டியிட போகிறார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ALSO READ | வரி கட்டாத விஜய் : நடவடிக்கை வேண்டாம் என்கிறது கோர்ட்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News