பா.ஜ.கவுடன் எப்போதும் தி.மு.க கூட்டணி அமைக்காது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மோடிக்கு பதில்......


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பழைய நண்பர்களுடன் கூட்டணி வைக்க பாஜக தயாராக இருக்கிறது என பிரதமர் மோடி கூறியதற்கு, பாஜகவுடன் கூட்டணி இல்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக  தெரிவித்துள்ளார். 


2019 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வருவதையொட்டி, பழைய நண்பர்களுக்கு கூட்டணி வைப்பதற்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன என நேற்று பிரதமர் மோடி கூறியிருந்தார். 


இந்நிலையில், இது குறித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "திமுக, பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி வைக்காது.  வாஜ்பாயுடன் மோடி தன்னை ஒப்பிட்டுக்கொள்வது வேடிக்கையாகவும் , விநோதமாகவும் உள்ளது. நாட்டை பிளவு படுத்தும் எந்த திட்டத்தையும் வாஜ்பாய் அரசு முன்வைக்காததாலேயே அந்த கூட்டணிக்கு திமுக ஆதரவளித்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.