DMK Food Donation: கொரோனா நோயாளிகளுக்கு ஆலய அன்னதான திட்டம் விரிவாக்கம்!
கொரோனா நோய்ப் பரவலால் உலகமே தத்தளித்து வருகிறது. கொடும்தொற்றான கொரோனாவின் பிடியில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
கொரோனா நோய்ப் பரவலால் உலகமே தத்தளித்து வருகிறது. கொடும்தொற்றான கொரோனாவின் பிடியில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
முகக்கவசம் அணிவது கட்டாயம், சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியம் என்பது போன்ற அடிப்படை தனிமனித கட்டுப்பாடுகளுடன், லாக்டவும், ஊரடங்கு என பொது கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஓட்டல்கள் மற்றும் உணவு விடுதிகள் செயல்படுவதில்லை. இதனால் கொரோனா தொற்றுக்காக மருத்துவமனைகளில் நோயாளிகளுடன் இருப்பவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உணவு வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
ALSO READ | ஆக்சிஜன் அதிக அளவில் உள்ள உணவுப் பொருட்கள் கொரோனாவை விரட்டுமா?
தற்போது இத்திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
அதேபோல நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள முக்கிய கோயில்களில் பக்தர்களுக்குத் தினமும் வழங்கப்பட்டு வந்த அன்னதானம் கொரோனா நோயாளிகளின் உறவினர்களுக்கு விநியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது.
Also Read | முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் கொடுக்கிறார் விஜயகாந்த்
தமிழக அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தலின் படி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் மற்றும் அவர்களுடன் இருக்கும் உறவினர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.
தற்போது, கொரோனா பேரிடர் காலத்தில், ஆலயங்களில் மக்கள் கூடுவதற்கு அனுமதியில்லை. எனவே, ஆலயங்களில் வழங்கப்பட்டு வந்த அன்னதான திட்டத்தின் பயனை பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் தமிழக அரசு விரிவுபடுத்தியிருக்கிறது.
Also Read | உருவானது ‘டவ் தே’ புயல்; தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR