Chennai Mayor Priya: சென்னை ராயபுரம் அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள நீரிழிவு நோய் பிரிவின் மூன்றாம் தளத்தில் இந்த முழு உடல் பரிசோதனை செய்யப்படுவதை பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக இன்று 30 மாநகராட்சி பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் என்ன கூறினார் என்பதை பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கூறியது..


சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு பொது மருத்துவமனை, கலைஞர் நூற்றாண்டு அரசு பண்ணோக்கு மருத்துவமனை, கீழ்பாக்கம் அரசு பொது மருத்துவமனை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, மற்றும் சென்னை மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 5 மருத்துவமனைகளில் மாநகராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இலவசமாக முழு உடல் பரிசோதனை செய்யப்படும் 


பணியாளர்களுக்கு இரத்த கொழுப்பு சிறுநீரக ரத்த பரிசோதனை, தைராய்டு பரிசோதனை, ரத்த சர்க்கரை பரிசோதனை, ரத்த வகை கண்டறிதல், எச்ஐவி பரிசோதனை, கண் பரிசோதனை, காது பரிசோதனை உள்ளிட்ட 16 வகையான பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன.


35 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுகிறது. பெண்களுக்கு முக்கியமாக இந்த பரிசோதனை செய்யப்படுகிறது.


மேலும் இதற்காக கூடுதல் சிகிச்சை தேவைப்பட்டால் அரசின் திட்டங்கள் அதிகம் உள்ளன. அந்தத் திட்டங்கள் மூலம் ஒன்றிணைத்து சிகிச்சை வழங்கப்படும்.


மாநகராட்சி ஊழியர்களுக்கு இலவசமாக முழு உடல் பரிசோதனை செலவினமான 1.19 கோடி ரூபாயை மாநகராட்சி செலுத்தி உள்ளது.


அனைத்து மக்களுக்கும் ஆயிரம் ரூபாய் செலவில் முழு உடல் பரிசோதனை செய்வதற்கான திட்டம் ஏற்கனவே நடைமுறையில் இருக்க்கிறது. 


சென்னையில் வாகன நிறுத்தத்தை பொருத்தவரை கூடுதலாக மூன்று மல்டி லெவல் பார்க்கிங் அமைக்க திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 


மேலும் படிக்க - திமுக அரசு விஜய்யை பார்த்து ஏன் பயப்படுகிறார்கள் என்று தெரியவில்லை - எல்.முருகன்!


டெங்கு காய்ச்சல் பொருத்தவரை நல்ல தண்ணீரில் உருவாகும் கொசுவால் ஏற்படுகிறது. 


கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 87 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்தாண்டை விட இந்த ஆண்டு பாதிப்பு குறைவாக உள்ளது. 


மழைநீர் வடிகால் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. அதேபோல் கோவளம் பணிகளும் நடைபெற்று வருகிறது.


பொதுமக்களும் தங்கள் வீட்டில் பயன்படுத்தும் தண்ணீரை மூடி வைத்து பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். 


செப்டம்பர் மாதத்திற்கு மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க அறிவுறுத்தி உள்ளோம்.


வரவிருக்கும் பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் மழைநீர் வடிகால் பணிகளை கொண்டு வருகிறோம். 


சிதிலமடைந்த பகுதிகளையும் சரி செய்து வருகிறோம்.


இவ்வாறு செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் கூறினார்.


மேலும் படிக்க - தள்ளிப்போகிறதா தவெக மாநாடு...? குழப்பத்தில் விஜய் - பின்னணி என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ