திமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பி-க்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் ஆலோசனை...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களவை தேர்தல் தொடர்பாக ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் திமுக எம்.பிக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கும் ஆலோசனைக்கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. திமுக-வின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுக-வின் தொகுதி பங்கீடுகள், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் ஆகியவற்றை குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 


2004 மற்றும் 2009 நாடாளுமன்ற தேர்தல்களில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்த திமுக, கணிசமான வெற்றியை பதிவு செய்தது. ஆனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. இதை கருத்தில் கொண்டு காங்கிரஸ் உள்ளிட்ட தோழமை கட்சிகளுக்கு திமுக குறைந்தளவிலான தொகுதிகளையே ஒதுக்கும் என தகவல் தெரியவருகின்றன.



நாடாளுமன்ற தேர்தல் குறித்து திமுக நடத்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அண்மையில் கட்சியில் சேர்க்கப்பட்ட செந்தில் பாலாஜி பங்கேற்றுள்ளார். இதனால் அவர் திமுக-வின் ஏதேனும் ஒரு தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என தெரிகிறது. தவிர பொருளாளர் துரைமுருகன், டி.ஆர். பாலு உள்ளிட்ட திமுகவின் முக்கிய நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.