உதயநிதி நடந்தால் ஊர்வலம்; உட்கார்ந்தால் பொதுக்கூட்டம் - திமுக அமைச்சர்!
தமிழர்கள் திராவிடம் என்றால் வெறுக்கின்ற ஒரே பிரதமர் யார் என்றால் ஒன்றிய பிரதமர் மோடி அவர்கள் தான் என தமிழக பால் வளதுறை அமைச்சர் சா. மு.நாசர் பேசியுள்ளார்.
திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 45 வது பிறந்த நாளை முன்னிட்டு ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு திருமுல்லைவாயில் சோழாழம்பேடு பகுதியில் சுமார் 2000 பொதுமக்களுக்கு வேட்டி சேலை, 100 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உடை உள்ளிட்ட நலதிட்ட உதவிகளை தமிழக பால் வளத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் வழங்கினார். விழா மேடையில் பேசிய அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், தமிழச்சியை பழித்து பேசிய காரணத்திற்காக கனகமிசையின் தலையில் கல்லைக் கொண்டு வந்து கண்ணகிக்கு சிலை வடித்தவன் யார் என்றால் சேரன் செங்குட்டுவன், அது சிலப்பதிகாரம். இந்த கொடூரமான கொடுங்கோள் ஆட்சி எடப்பாடி ஆட்சியை ஒரே ஒரு செங்கல் காண்பித்து கழட்டி மீண்டும் கழக கோட்டையை தலைமை கோட்டையாக்கிய பெருமை நம்முடைய உதயாவுக்கு உண்டு, இது செங்கல் அதிகாரம்.
ஒரே ஒரு செங்கல் காண்பித்து அது நட்டு வைத்துவிட்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டில் விட்டதாக சென்று விட்டார் பிரதமர் மோடி. இதுவரை அதற்கு வழியே இல்லை மருத்துவமனையும் இதுவரை வரவில்லை. அதே நேரத்தில் அவர்கள் ஆளுகின்ற குஜராத் மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடித்து தற்போது துவக்கி வைத்தார். பிரதமர் மோடிக்கு தமிழர்கள் என்றாலே அவர் தள்ளி வைக்கிற வேலை தான். தமிழ் என்றால் பிடிக்கவே பிடிக்காது. முழுக்க முழுக்க மொழியால் இனத்தால் திராவிடத்தை வெறுக்கின்ற ஒரே பிரதமர் யார் என்றால் ஒன்றிய பிரதமர் மோடி அவர்கள் தான். ஆனால் அந்த ஒரு செங்கல்லை வைத்து ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்து பெருமை உதயா அவர்களுக்கு சேரும்.
மேலும் படிக்க | தற்கொலைக்கு ஆளுநரே பொறுப்பேற்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு
உதயா அவர்கள் நடந்தால் ஊர்வலம் உட்கார்ந்தால் பொதுக்கூட்டம். அந்த அளவுக்கு கடந்த காலத்தில் அவர் ஆற்றிய பணியின் மூலம் இன்றைய தினம் திராவிட முன்னேற்றக் கழகம் அரியணையில் உட்கார்ந்து. தமிழ் நாட்டிற்க்கும் தமிழ் மக்களுக்கும் கடல் கடந்து வாழ்கிற தமிழர்களுக்கும் உற்ற உறுதுணையாக இருந்து. இந்திய ஒருமைப்பாட்டிற்கு எந்த கோணத்தில் ஆபத்து வந்தாலும் தட்டிக் கேட்கின்ற ஒரே தலைவர் யார் என்றால் நம்முடைய தமிழக முதல்வர் தளபதி அவர்கள் தான். தமிழர்களை பாதுகாக்கின்ற தமிழ் மொழியை பாவிக்கின்ற ஒரு இனம் மானம் உள்ள ஒரு இளைஞர் யார் என்றால் உதயநிதி அவர்கள் தான். திமுக இளைஞரணி செயலாளர் பதவி உதயநிதி ஸ்டாலினின் உழைப்புக்கு கிடைத்த பரிசு. திமுகவில் குறுக்கு வழியில் யாரும் வரமுடியாது.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டுமென்ற கருத்துக்கு மாற்று கருத்து இல்லை. கடந்த காலங்களில் நடைபெற்ற அனைத்து தேர்தலின் வெற்றிகளும் உதயநிதியின் அணுகுமுறையால் கிடைத்து வெற்றி. உதயநிதி பொறுப்புக்கு வர வேண்டும் என்பது எங்களுடைய, ஆசை அவர் நிச்சயம் வர வேண்டும் அதற்கு மாற்றுக்கருத்தே இல்லை. அமைச்சராகும் பட்சத்தில் அவருக்கு என்ன துறை ஒதுக்க வேண்டுமென முதல்வரே முடிவு செய்வார் என ஆவடியில் அமைச்சர் சாமு நாசர் பேட்டி அளித்துள்ளார்.
மேலும் படிக்க | டி ஷர்ட், பேண்ட்டுடன் மனித எலும்புக்கூடு - கூடுவாஞ்சேரியில் அலறிய மக்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ