சென்னை: முந்திரி தொழிற்சாலை ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆளும்கட்சியான திமுகவின் எம்.பி ரமேஷ், பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை இரண்டு நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொழிற்சாலை பணியாளர் கொலை தொடர்பாக கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் மற்றும் அவரது தொழிற்சாலையில் பணிபுரியும் நடராஜ், சுந்தர், வினோத், கந்தவேல், அல்லா பிச்சை என மொத்தம் 6 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்த சிபிசிஐடி போலீசார் 5 பேரை கைது செய்திருந்தனர். எம்.பி மட்டும் தலைமறைவாக இருந்தார். தற்போது அவரும் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.


இந்த விவகாரம் தொடர்பாக, பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்த எம்.பி ரமேஷ் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், தன் மீது எந்த தவறும் இல்லை என்றும், ஆனால் சில அரசியல் கட்சிகள், இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக திமுகவை தாக்க பயன்படுத்தி வருவதால், தான் சரணடைவதாக தெரிவித்துள்ளார். மேலும், தன் மீது தவறு எதுவும் இல்லை என்று சட்டரீதியாக நிரூபித்து உண்மையை வெளிச்சத்துக் கொண்டு வருவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “என்னுடைய முந்திரித் தொழிற்சாலையில் பணிபுரிந்த கோவிநதராஜ் என்பவரது மரணம் தொடர்பாக சிபிசிஐடி என்மீது பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் திமுகவின் மிது சில அரசியல் கட்சிகள், காழ்ப்புணர்ச்சியுடன் தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர்”. 


”இது எனது மனதிற்கு நெருடலாக இருந்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர் என்ற முறையில், கட்சியின் மீதான இந்த விமர்சனங்கள், எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது”.


”எனவே, எனது உயிரிக்கும் மேலான தலைவரின் நல்லாட்சியின் மீது வீண்பழி போடுபவர்களுக்கு மேலும் இடம் கொடுத்திட வேண்டாம் என்பதற்காக இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் சரணடைகிறேன்” என்று எம்.பி ரமேஷ் தெரிவித்துள்ளார். 


Also Read | நீட் ரத்து : திமுக அரசின் பொய்யான வாக்குறுதி - அதிமுக காட்டம்


தலைமறைவாக இருந்த கடலூர் திமுக எம்பி ரமேஷ் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இன்று பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்த்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொலை வழக்கில் சிக்கி இருப்பதால், அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து திமுக கட்சியின் தலைவரும், மாநில முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்தாலோசித்தார். கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதாக பரவலாக கருதப்படும் நிலையில், ரமேஷ் கட்சியில் இருந்து நீக்கப்படுவாரா அவர் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என பல்வேறுவிதமான ஊகங்கள் உலா வருகின்றன.


முன்னதாக, எம்.பி ரமேஷுக்கு சொந்தமான டிவிஆர் முந்திரி தொழிற்சாலையில் பணியாற்றி வந்த கடலூர் மாவட்டம் மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ். கடந்த மாதம் 19ஆம் தேதி வேலைக்கு சென்ற கோவிந்தராஜ், வீடு திரும்பவில்லை. ஆனால், கோவிந்தராஜின் மகனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட எம்.பி ரமேஷின் உதவியாளர், கோவிந்தராஜ் இறந்துவிட்டதாகவும், அவரது உடல் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 


அவரது மகன் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது கோவிந்தராஜின் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததால், சந்தேகமடைந்த அனைவரும் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என்ற கோரிக்கையுடன் காடாம்புலியூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். பிறகு பல்வேறு போராட்டங்களை அடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்துவருகிறது.


Also Read | சட்டம் - ஒழுங்கை பராமரிக்க இயலாத மெத்தன திமுக அரசு - அதிமுக கண்டனம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR